Home /News /international /

இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறியது மவுண்ட் மெரபி எரிமலை!

இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறியது மவுண்ட் மெரபி எரிமலை!

இந்தோனேசியாவின் மவுண்ட் மெரபி எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் மலையில் இருந்து எழுந்த புகை மண்டலமானது சுமார் 6,000 மீட்டர் உயரம் வரை எழுந்துள்ளது.

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பின்போது ஏற்பட்ட சத்தம் சுமார் 30 கிலோமீட்டர் வரை கேட்டதாக, அங்கு வாழும் மக்கள் தெரிவித்தனர். எரிமலை சீற்றத்தின் போது எழுந்த புகை மண்டலமும் சாம்பலும் சுமார் 2 கிலோமீட்டர் வரை பரவியது.

இதனால் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2010-ஆம் ஆண்டு இதே எரிமலை கடுமையாக வெடித்தபோது, 310 மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. இந்தோனேஷியாவில் இருக்கக்கூடிய 500-க்கும் மேற்பட்ட எரிமலைகளில் இந்த மவுண்ட் மெரபிதான் தற்போது சீற்றத்துடன் காணப்படுகிறது.

Also see...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Indonesia, Volcano

அடுத்த செய்தி