எவரெஸ்ட் சிகரம் ஏற அலைமோதும் கூட்டத்தால் அதிகரிக்கும் மரணங்கள்..!

கூட்ட நெரிசாலால் பனி மலைச்சிகரத்தில் குறைந்தபட்சமாக 12 மணி நேரம் காத்திருந்து ஏற வேண்டிய சூழலால்தான் அதிக மரணங்கள் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: May 25, 2019, 5:01 PM IST
எவரெஸ்ட் சிகரம் ஏற அலைமோதும் கூட்டத்தால் அதிகரிக்கும் மரணங்கள்..!
சிகரம் ஏறும் மக்கள் கூட்டம்
Web Desk | news18
Updated: May 25, 2019, 5:01 PM IST
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற உலகம் முழுவதும் இருந்து மலைஏற்றம் மீது ஆர்வம் கொண்ட மக்கள் பலர் கூட்டம் கூட்டமாகக் குவியத் தொடங்கியுள்ளனர். அதிகப்படியான கூட்டத்தால் 10 பேர் பலியாகி உள்ளனர்.

உலகின் உயரமான மலைச்சிகரமாக உள்ள எவரெஸ்ட் சிகரம் மீது ஏற உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருகை தருகின்றனர். கடந்த சில வாரங்களாக மலை ஏற்றத்துக்கான கூட்டம் கடுமையாக அதிகரித்து வருகிறது. ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் மலை ஏறி வரும் ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தக் கூட்ட நெரிசலால் மலை ஏறுவோர் பலரும் பல இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனர். அதிகமான சுமையைத் தூக்கிக்கொண்டு மலை ஏறுவோர் அடுத்து வருபவருக்குக் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.


கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 10 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏற முற்பட்டு பலியாகி உள்ளனர். கூட்ட நெரிசல், பனிச்சரிவு, சோர்வு எனப் பல காரணங்களாலும் மக்கள் பலியாகி வருவது தொடர்ந்து நடப்பது தற்போது பெரும் விவகாரமாக உள்ளது.

குறிப்பாக, கூட்ட நெரிசலால் பனி மலைச் சிகரத்தில் குறைந்தபட்சமாக 12 மணி நேரம் காத்திருந்து ஏற வேண்டிய சூழலால்தான் அதிக மரணங்கள் நிகழ்வதாக எவரெஸ்ட் மலைஏற்ற வழிகாட்டிகள் விளக்குகின்றனர்.

மேலும் பார்க்க: அளவில் சிறியதாக மாறும் மிருகங்கள்... அழிவை நோக்கி ஓர் இனம்..!
First published: May 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...