Home /News /international /

10 குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.. ரஷ்ய பெண்களுக்கு லட்சத்தில் பரிசு அறிவித்த புடின்

10 குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.. ரஷ்ய பெண்களுக்கு லட்சத்தில் பரிசு அறிவித்த புடின்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Vladimir Putin: ரஷ்யாவின் மக்கள் தொகை 2022ல் தற்போது வரை 4 லட்சம் குறைந்து 145.1 மில்லியனாக உள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Russia
    ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் விதத்தில் பெண்கள் 10 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.13 லட்சமும் ’மதர் ஹீரோயின்’ என்ற பட்டமும் வழங்கப்படும் என புடின் அறிவித்துள்ளார்.

    உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. இதில், உக்ரைனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டாலும், தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதேபோல், போர் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. இதனால் பொருளாதார ரீதியாக ரஷ்யா பலவீனமடைய தொடங்கியுள்ளது. போர் தொடங்கி 150 நாட்களுக்கும் மேல் கடந்துள்ள நிலையில், ரஷ்யா தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே ரஷ்யாவின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதனை சரி கட்டும் விதமாக பெண்கள் 10 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.13 லட்சமும் ’மதர் ஹீரோயின்’ என்ற பட்டமும் வழங்கப்படும் என புடின் அறிவித்துள்ளார்.

    இரண்டாம் உலகப்போரின் போது ரஷ்யாவின் மக்கள் தொகை பெருமளவு குறைந்தது. இதனை சரிக்கட்டும் விதமாக அப்போதைய சோவித் ஒன்றியத்தின் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின், அதிக குழந்தைகளை பெண்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு மதர் ஹிரோயின் என்ற பட்டம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். சோவியத் ஒன்றியம் பிரியும் வரை இந்த பட்டம் வழங்கப்பட்டு வந்தது.  சோவியத் ஒன்றியத்தில் இருந்து பல நாடுகள் பிரிந்து சென்றப்பின் இது நிறுத்தப்பட்டது.

    இதையும் படிங்க: கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தொடர்ந்து துரத்தும் மனநலன் சார்ந்த பிரச்சனை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    இந்நிலையில், 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதர் ஹிரோயின் பட்டம் வழங்கப்படும் என புடின் அறிவித்துள்ளார். 10வதாக பிறக்கும் குழைந்தைக்கு 1 வயது நிறைவடைந்த உடன் இந்தத் தொகை கிடைக்கும் என்றும் போரில் அல்லது அவசரநிலையில் குழந்தைகளில் யாரேனும் உயிரிழந்தாலும் பரிசு கிடைக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மக்கள் தொகை 2022ல் தற்போது வரை 4 லட்சம் குறைந்து 145.1 மில்லியனாக உள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Russia, Russia - Ukraine, Vladimir Putin

    அடுத்த செய்தி