• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • மற்ற நாட்களை விட பிப்.14-ம் தேதி காதலர்கள் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் - டேட்டிங் நிபுணர் கருத்து

மற்ற நாட்களை விட பிப்.14-ம் தேதி காதலர்கள் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் - டேட்டிங் நிபுணர் கருத்து

காதலர் தினம்

காதலர் தினம்

கட்டாயமாக எதிர்பார்க்கப்படும் பரிசைப் பெறுவதை விட காதலர் தினத்தன்று அதிகம் நேசிக்கப்படுவதை விரும்புவதாக 60 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கணக்கெடுப்பில் தெரிவித்ததாக வார்டு கூறியுள்ளார்.

  • Share this:
உலகெங்கிலும் உள்ள தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகள் காதலர் தினத்தை பிப்ரவரி 14-ம் தேதி அன்று கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு டேட்டிங் நிபுணர் ஒருவர் காதல் பற்றிய மிகப்பெரிய கட்டுக்கதைகளை உடைத்துள்ளார். காதலர் தினம் என்றாலே, பரிசுப் பொருட்கள் மற்றும் கொண்டாட்டம் போன்றவை தான் நியாபகத்திற்கு வரும். அதிலும் ரோஜாக்கள் என்பது தான் அன்றைய தினத்தில் காதல் சின்னமாக கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் காதலர் தினத்திற்காக சிகப்பு ரோஜாக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும். 

இந்த நிலையில் மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியை சேர்ந்த டேட்டிங் நிபுணர் லூன்னே வார்ட், காதலர் தினம் குறித்து பொதுவாக பரவியுள்ள தவறான கருத்துக்களைச் சுட்டிக்காட்டினார். சிவப்பு ரோஜாக்கள் தான் பிப்ரவரி 14-ம் தேதி அன்று பரிசளிக்க வேண்டிய ஒரு ரொமான்டிக் பூக்கள் என்பவை எல்லாம், வணிகரீதியாக ஒரு விஷயத்தை மிகைப்படுத்தல் என்று சொல்ல வேண்டுமா அல்லது ஆண்டின் காதல் நாள் என்று சொல்ல வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் காதலர் தினத்தை உணருகிறார்கள். 

ஒவ்வொரு பிப்ரவரியிலும், காதலர் தினம் குறித்த விஷயங்கள் அவர்களின் உரையாடலில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை மறுக்க முடியாது என்று வார்ட் டெய்லி மெயில் ஆஸ்திரேலியா பத்திரிகையில் தெரிவித்தார். மேலும், ”இந்த காதலர் தினத்தில், பரிசளிக்க வேண்டுமா அல்லது பரிசளிக்க வேண்டாமா? காதலருடன் காதலர் தினத்தை பெரிதாக கொண்டாட வேண்டுமா? இல்லை சாதாரணமாக கொண்டாட வேண்டுமா? என ஆண்களும் பெண்களும் விரும்பும் ஒரு சந்தோஷமான தினத்தை சுற்றியுள்ள மரபுகளும், கட்டுக்கதைகளும் நம்மை சுற்றி  இருக்கும்போது இந்த சாதாரண கேள்விகளுக்கு பதிலளிப்பது கூட கடினமாகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் லூன்னே வார்ட் சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிங்கிள்ஸ் மற்றும் கமிடட் உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவில் தனது ஆராய்ச்சியை நடத்தியுள்ளார். அதில் சுமார்  63 சதவீத ஆண்களும் பெண்களும் காதலர் தினத்தில் பரிசுகளை வழங்குவதை விட அவர்கள் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதைக் கூற விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிந்தார். இருப்பினும், காதலர் தினத்தை சுற்றியுள்ள எதிர்பார்ப்புகளால் பல காதல் ஜோடிகள் பிரிந்து விடுகின்றனர் என்று வார்டு கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்ட அவர், காதலர் தினத்தில் நடக்கும் சில உண்மைகளையும், கட்டுக்கதைகளையும் விளக்கினார். அவை பின்வருமாறு:

காதலர் தினத்திற்கு முன்னும் பின்னும் அதிகமான ஜோடிகள் பிரிந்து செல்கின்றனரா?

காதலர் தினத்திற்கு முன்னதாக எப்படியாவது ஒரு துணையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு கடைசியில் நம்பிக்கையை கைவிடும் சிங்கிள்ஸ் ஒருபுறம் இருக்க, ஏற்கனவே காதலிக்கும் ஜோடிகள் காதலர் தினத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ பிரிந்து செல்ல முடிவெடுக்கின்றனர். கணக்கெடுக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களில் கிட்டத்தட்ட 50% பேர் காதலர் தினத்தில் தங்கள் காதலருடன் சண்டையிட்டதாக கூறியுள்ளனர். பொதுவாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை சமயத்தை தான் 'பிரிந்து செல்லும் பருவம்' என்று சொல்வார்கள். இது பொதுவானது என்றாலும், புதிய கணக்கெடுப்பின் படி காதலர் தினத்தில் தான் அதிக ஜோடிகள் பிரிந்து செல்கின்றனர் என வார்டு தெரிவித்துள்ளார்.

பெண்களை விட ஆண்கள் குறைவான காதல் கொண்டவர்களா?

வார்டின் கூற்றுப்படி, இது முற்றிலும் உண்மை இல்லை எனக் கூறியுள்ளார். ஏனெனில் ஆராய்ச்சியில் பதிலளித்தவர்களில் 58 சதவீதம் பெண்கள் உண்மையில் ஆண்களை விட அதிக காதல் கொண்டவர்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் 42% மக்கள் அப்படி இல்லை என்று கூறியுள்ளனர். அதிலும், ஒரு துணையை தேர்ந்தெடுப்பதில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக கவனம் செலுத்துவார்கள் என்று வார்டு கூறினார்.

உள்ளாடை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் மகிழ்ச்சியாக வைக்கிறதா?

இந்த தினத்தில் 70% க்கும் அதிகமான ஆண்கள் தங்கள் காதலிக்காக உள்ளாடைகளை வாங்குவார்கள் என்றும் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் தங்கள் துணியை உள்ளாடைகளில் பார்க்க விரும்புவார்கள் என்று நம்பப்படுகிறது. சுமார் 64 சதவீத பெண்கள் உள்ளாடைகளை பரிசாகப் பெறுவதில் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிவப்பு ரோஜாக்கள் காதலர் தினத்தின் ரொமான்டிக் மலரா?

காதலர் தினத்தில் சிவப்பு ரோஜாக்கள் பாதுகாப்பான தேர்வாக இருந்தாலும், சிவப்பு ரோஜா இந்த நாளில் பெண்ணின் முதல் தேர்வாக இல்லை என்றும் கணக்கெடுப்பு காட்டியுள்ளது என்று கூறினார்.

உங்கள் அன்பைக் காட்ட ஒரு பரிசை வாங்குவது முக்கியமா?

கட்டாயமாக எதிர்பார்க்கப்படும் பரிசைப் பெறுவதை விட காதலர் தினத்தன்று அதிகம் நேசிக்கப்படுவதை விரும்புவதாக 60 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கணக்கெடுப்பில் தெரிவித்ததாக வார்டு கூறியுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: