இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்துள்ள ஜகார்த்தா இஸ்லாமிய மையத்தில் பெரிய மசூதி கட்டிடத்தில் கடந்த புதன்கிழமை புதுப்பித்தல் பணி நடந்துகொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் மசூதியின் கோபுரம் தரைமட்டமாகியுள்ளது.
மசூதி தரைமட்டமான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தோனேசிய நேரப்படி மதியம் 3 மணிக்கு தீ அணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். முதல் கட்டமாக 10 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை கிடைத்த தகவலின் படி, தீயினால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Mosque dome in Jakarta collapses in fire
According to local media reports, it was the #Jakarta Islamic Center in Koja. pic.twitter.com/ItptlxfOgg
— Nguyen Ken (@NguyenK68421403) October 19, 2022
தீ விபத்து ஏற்பட்டதிற்காகக் காரணம் தெரிவிக்கப்படாத நிலையில் மசூதியில் வெறும் கட்டிடப் பணி ஊழியர்களே இருந்துள்ளனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஜகார்த்தா இஸ்லாமிய மையம் பெரிய மசூதி வளாகத்தில், மசூதி கட்டிடம் தவிரக் கல்வி, வணிகம் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் என்று பல கட்டிடங்களை உள்ளது. 20 வருடங்களுக்கு முன்னால் இதே போன்று அந்த மசூதி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Building collapse, Mosque, Viral Video