உலகில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகள் மற்றும் தாவர இனங்கள், உலக பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) ஆபத்தான உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் உள்ளதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு WWF லிவிங் பிளானட் அறிக்கை, உயிரினங்களில் வியத்தகு சரிவைக் காட்டுகிறது. 1970 ஆம் ஆண்டிலிருந்து கவனிக்கப்பட்ட காட்டு இனங்களின் எண்ணிக்கை சராசரியாக 69 சதவிகிதம் குறைந்துள்ளது. இயற்கை பாதுகாப்பு அமைப்பு "உலகளாவிய இனங்கள் அழிவின் பேரழிவு மோசமடைந்து வருகிறது" என்று எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள ஆண்டு அறிக்கையில், பனிமான், எம்பெரர் பென்குயின்கள் உள்ளிட்டவை சிவப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் வடக்கு பகுதியான டைமிர் பகுதியில் வசிக்கும் பனிமான்கள், கடந்த 2000 ஆம் ஆண்டில் 10 லட்சமாக இருந்த நிலையில், தற்போது, நான்கில் ஒரு பகுதியாக குறைந்து விட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று, எம்பெரர் பென்குயின் இனங்கள் அழிவை நோக்கி செல்வதாகவும், 2100ம் ஆண்டளவில் முற்றிலும் அழிந்து போகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றமும், வேட்டையாடுதலுமே இதற்கு முதன்மை காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், நேபாள புலிகளின் எண்ணிக்கையும், ஆஸ்திரேலியாவில் ஹம்ப்பேக் திமிங்கலங்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் உலகளாவிய நிதியத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அவற்றின் எண்ணிக்கை 1,500 முதல் 40,000 - 65,000 வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Climate change, Danger