ஹோம் /நியூஸ் /உலகம் /

ரஷ்ய ராணுவம் தாக்குதலால் 40 லட்சம் மக்கள் இருளில் மூழ்கினர்.. உக்ரைன் அதிபர் வேதனை!

ரஷ்ய ராணுவம் தாக்குதலால் 40 லட்சம் மக்கள் இருளில் மூழ்கினர்.. உக்ரைன் அதிபர் வேதனை!

இருளில் மூழ்கி தவிக்கும் உக்ரைன் மக்கள்

இருளில் மூழ்கி தவிக்கும் உக்ரைன் மக்கள்

போர் தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் 3 லட்சம் ரிசர்வ் ராணுவ வீரர்களை உக்ரைன் நோக்கி அனுப்பியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaKyivKyiv

  உக்ரைன் மீது கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ராணுவத் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைனுக்கு சொந்தமான பல நகரங்களை கைப்பற்றியது. எனினும், உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளிடம் சரணடைய மறுத்து தீரத்துடன் சண்டையிட்டு பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக ரஷ்ய ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை உக்ரைன் மீட்டு வரத் தொடங்கியது.

  அத்துடன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த க்ரைமியா பாலத்தின் மீது உக்ரைன் எதிர்பாராத ஏவுகணை தாக்குதல் நடத்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இது ரஷ்யாவை ஆத்திரமூட்டிய நிலையில், உக்ரைன் செயலுக்கு பதிலடி தரும் விதமாக தாக்குதல் யுக்தியை வேறு விதமாக ரஷ்யா மாற்றியுள்ளது.

  உக்ரைனை இயங்கிவிடாமல் ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் அந்நாட்டின் மின்னுற்பத்தி நிலையங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, அந்நாட்டின் 40 லட்சம் மக்கள் இருளில் மூழ்கியுள்ளதாக அதிபர் செலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.

  குறிப்பாக, உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மின் நிலையங்கள் மீது ரஷ்யா குறிவைத்து தாக்கியுள்ளதால் வரலாறு காணாத வகையில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. நகரின் 30 சதவீத பகுதி இருளில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் கார்கீவ், சைடோமர், போல்டாவா, செர்னேவ் உள்ளிட்ட நகரங்களும் கடும் மின்வெட்டு பிரச்னைக்கு ஆளாகியுள்ளன.

  இதையும் படிங்க: எதிர்காலம் இந்தியாவுக்கானது... தேசபக்தர் மோடியின் தலைமை... ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்

  மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பையும் சரி செய்யும் பணிகள் துரிதமாக நடைபெறுவதாக அதிபர் செலன்ஸ்கி மக்களுக்கு நம்பிக்கை தந்துள்ளார். அதேவேளை, தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் 3 லட்சம் ரிசர்வ் ராணுவ வீரர்களை உக்ரைன் நோக்கி அனுப்பியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி தெரிவித்துள்ளார். இதனால் இந்த போர் மேலும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Russia - Ukraine, Vladimir Putin