முகப்பு /செய்தி /உலகம் / கொட்டித்தீர்க்கும் கனமழை... திடீர் நிலச்சரிவு.. பெரு நாட்டில் 36 பேர் பலியான சோகம்

கொட்டித்தீர்க்கும் கனமழை... திடீர் நிலச்சரிவு.. பெரு நாட்டில் 36 பேர் பலியான சோகம்

பெருவில் கோர நிலச்சரிவு

பெருவில் கோர நிலச்சரிவு

பெரு நாட்டில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • intern, IndiaLimaLima

துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், பெரு நாட்டில் மற்றோரு இயற்கை பேரிடர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்அமெரிக்க நாடான பெருவின் தெற்கு பகுதியில் கடந்த சில நாள்களாக இடை விடாமல் தொடர் கனமழை பெய்து வருகின்றது.

இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கிராமப் பகுதிகளில் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இந்த பகுதிகளில் மலைக்குன்றுகளை சுற்றி பல கிராம குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள அரேகிபா அதை சுற்றியுள்ள கிராமங்களில் மழை வெள்ள பாதிப்பு தாக்கத்தால் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலச்சரிவில் இருந்து தப்பிக்க ஒரு பகுதியின் மக்கள் வேனில் ஏறி பயணித்த போது அந்த வேன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. அதில் மாயமானவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதேபோல் பல பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகி உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த பாதிப்பில் 4 கிராமங்கள் மிக மோசமான பாதிப்பை கண்டதாகவும், 300க்கும் மேற்பட்ட வீடுகள், சாலைகள் உள்ளிட்டவை நிலச்சரிவு காரணமாக சேதமடைந்ததாகவும் அரேகிபா பகுதியின் ஆளுநர் ரோஹெல் சான்செஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நிலநடுக்கம் என்றால் என்ன, ஏன் ஏற்படுகிறது.? சுனாமி வர என்ன காரணம்.. முழு விவரம்.!

அந்நாட்டு அரசு ஹெலிக்காப்டர் மூலம் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கொடுக்க ஆங்காங்கே தற்காலிக சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, அங்கு கனமழை தொடர்ந்து பொழிந்து வருவதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழல் நிலவி வருகிறது. அங்கு ஏற்பட்ட திடீர் ஆட்சி மாற்றத்திற்கு எதிராக தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் வெடித்ததால் அங்கு அவசர நிலை பிறபிக்கப்பட்டது. இத்தகைய குழப்பமான சூழலுக்கு மத்தியில் இந்த பேரிடர் பாதிப்பு அங்கு ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Disasters, Flood, Peru