ஹோம் /நியூஸ் /உலகம் /

ஹாலோவீன் கொண்டாட்டத்தில் விபரீதம்.. 140 பேர் பலியான சோகம் - அதிர்ச்சியில் தென்கொரியா

ஹாலோவீன் கொண்டாட்டத்தில் விபரீதம்.. 140 பேர் பலியான சோகம் - அதிர்ச்சியில் தென்கொரியா

தென்கொரியா

தென்கொரியா

கூட்ட நெரிசலில் பலர் மாரடைப்புக்கு ஆளான நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaSeoulSeoul

  தென்கொரிய நாட்டில் பொதுமக்கள் குழுமியிருந்த விழா நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

  தென்கொரிய நாட்டின் சியோலில் இதாவோன் என்ற பகுதியில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த திருவிழாவானது உயிரிழந்த முன்னோர்கள், புனிதர்கள், உற்றார் உறவினர்களை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. அங்கு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹாலோவீன் திருவிழா நடைபெறாமல் இருந்தது.

  இந்தாண்டு அந்த விழாவை கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இடாவோன் பகுதியில் நேற்றிரவு சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்தனர். அப்போது குறுகிய வீதி ஒன்றில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by News18.com (@cnnnews18)  இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர், மயங்கி விழுந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

  இதையும் படிங்க: மகளை கடித்த நண்டு... பழிவாங்க அதை உயிருடன் விழுங்கி மருத்துவமனையில் அட்மிட் ஆன அப்பா

  இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக 149 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 20-30 வயதுகளில் இருக்கும் பெண்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது.  இச்சம்பவம் தற்செயலாக நிகழ்ந்த விபத்தா அல்லது பின்னணியில் ஏதேனும் பாதுகாப்பு குளறுபடி, சதித்திட்டம் போன்றவை உள்ளதா என்ற கோணத்தில் சியோல் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Halloween, South Korea