ஹோம் /நியூஸ் /உலகம் /

கால்பந்து போட்டியில் தோல்வி.. ரசிகர்கள் ஆத்திரத்தால் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழப்பு!

கால்பந்து போட்டியில் தோல்வி.. ரசிகர்கள் ஆத்திரத்தால் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழப்பு!

கால்பந்து மைதான களத்திற்குள் ரசிகர்கள் புகுந்ததால் நெரிசல்

கால்பந்து மைதான களத்திற்குள் ரசிகர்கள் புகுந்ததால் நெரிசல்

சுமார் 180 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaJakarta Jakarta Jakarta

  இந்தோனேசியாவில் கால்பந்து விளையாட்டு போட்டியில் தோல்வியை தாங்காமல் ரசிகர்கள் மேற்கொண்ட வன்முறையால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 127 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசிய நாட்டில் உள்ளூர் கிளப் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள கிழக்கு ஜாவா மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் போட்டி ஒன்று நடைபெற்றது.

  இந்த போட்டியில் உள்ளூர் அணிகளான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா அணிகள் களம் கண்டன. இந்த போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. தோல்வியடைந்த அரேமா அணியின் சொந்த மைதானத்தில்தான் இந்த போட்டி நடைபெற்றது என்பதால், அந்த அணியின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர்.

  சொந்த மைதானத்தில் சந்தித்த தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் ரசிகர்கள் போட்டி முடிந்ததும் அரங்கில் இருந்து மைதானத்திற்குள் திடீரென்று புகுந்தனர். தோல்வியை தாளாத ஆத்திரத்தில் ரசிகர்கள் அரேமா அணி வீரர்களை தாக்க தொடங்கியுள்ளனர். திடீரென்று ஏற்பட்ட கலவரத்தால் ரசிகர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி நடவடிக்கை எடுத்தனர்.

  இதனால்,அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 127 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 180 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  இதையும் படிங்க: அமெரிக்காவின் புளோரிடாவை புரட்டிப்போட்ட 'இயான்' புயல்... நாசா வெளியிட்ட பகீர் காட்சிகள்!

  கால்பந்து மைதானத்தில் நிகழ்ந்த இந்த பரபரப்பான மோதல் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் 2 காவல்துறையினரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

  விளையாட்டுப் போட்டி ஒன்று மாபெரும் கலவரமாக மாறியுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Football, Indonesia