அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் அடுத்தடுத்து தாக்கிய சூறாவளி காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சூறாவளி தாக்கிய கெண்டக்கி மாகாணத்தில் அவசர நிலையை அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ள கென்டகி மாகாணத்தில் அடுத்தடுத்து சூறாவளி புயல் தாக்கியது. இதில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை 100ஐ கடந்திருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சூறாவளியால் கென்டகியில் உள்ள ஒரு மெழுகுவர்த்தி தொழிற்சாலை மற்றும் தீ அணைப்பு மற்றும் காவல் நிலையங்களை சேதமடைந்தன.
அண்டை மாநிலமான மிசோரியில் ஒரு முதியோர் இல்லம் புயலில் சின்னாபின்னமானது. மேலும் இல்லினாய்ஸில் உள்ள அமேசான் கிடங்கில் சூறாவளியால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில், குறைந்தது ஆறு தொழிலாளர்கள் வரை உயிரிழந்துள்ளனர். கென்டகி கவர்னர் ஆண்டி பெஷியர் இது தொடர்பாக கூறுகையில், கென்டகி வரலாற்றில் இந்த தொடர் சூறாவளி மிகவும் அபாயகரமானது. சூறாவளி தாக்கும்போது மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் 110 பேர் இருந்தனர். இவர்களில் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வேறு யாரேனும் இடிபாடுகளுக்கு அடியில் உயிருடன் இருப்பது என்பது அதிசயம்தான்’ என தெரிவித்தார்.
அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய தொடர் சூறாவளியில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ள அதிபர் ஜோ பைடன், கடும் பாதிப்பை சந்தித்துள்ள கென்டகியில் அவசர நிலையை அமல்படுத்தியுள்ளார். மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமான கென்டகிக்கு நிதியை விடுவிப்பதற்காக, கூட்டாட்சி அவசரகால பேரிடர் பிரகடனத்தில் பிடென் கையெழுத்திட்டுள்ளார்.
இதையும் படிங்க: இளைய தலைமுறையினர் வாழ்நாள் முழுவதும் புகைபிடிக்க தடை.. அமலுக்கு வரும் புதிய சட்டம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.