இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு: மஹிந்த ராஜபக்சே, மம்தா பேனர்ஜி கண்டனம்

இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு: மஹிந்த ராஜபக்சே, மம்தா பேனர்ஜி கண்டனம்
குண்டுவெடிப்பு நடந்த தேவாலயம்
  • News18
  • Last Updated: April 21, 2019, 2:05 PM IST
  • Share this:
இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததை அடுத்து மஹிந்த ராஜபக்சே, மம்தா பேனர்ஜி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொழும்பு கொச்சிடை அந்தோணியார், கட்டான கட்டுவப்பட்டி தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையின் போது குண்டு வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.




கொழும்பு கொச்சிகடை பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டார் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சே. இதையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ‘இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது, மனிதாபிமானமற்ற செயல்' என்றார்.

இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர, ‘இது நாட்டில் குழப்பத்தை உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சி. மேலும் இது போன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இந்நிலையில் கொழும்புவில் உள்ள இந்திய உயர் ஆணையருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்வீட் செய்துள்ளார்.



குண்டு வெடிப்பு தொடர்பாக மம்தா பேனர்ஜி, ‘ குண்டு வெடிப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எந்த வகையிலும் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. குண்டு வெடிபில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன்’ என்றார்



Also watch

First published: April 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading