ஹோம் /நியூஸ் /உலகம் /

வீடியோ கேம்ஸ் தங்கள் குழந்தைகளுக்கு நல்லது என சொல்லும் 71% பெற்றோர்கள்!

வீடியோ கேம்ஸ் தங்கள் குழந்தைகளுக்கு நல்லது என சொல்லும் 71% பெற்றோர்கள்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சர்வதேச அளவிலும் குழந்தைகளிடம் வீடியோ கேம்ஸ் ஏற்படுத்தும் தாக்கம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  வீடியோ கேம்ஸ் தங்களது குழந்தைகளிடம் நேர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்துவதாக 71 சதவிகித பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

  அமெரிக்காவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்று சமீபத்தில் குழந்தை வளர்ப்பு, பெற்றோர் பணி குறித்த ஆய்வை மேற்கொண்டது. அதில் பங்கேற்ற பெற்றோர்களுள் 86 சதவிகிதத்தினர் தங்களது குழந்தைகளின் பெரும்பான்மையான நேரம் வீடியோ கேம்ஸ் விளையாடுவதிலேயே கழிவதாகத் தெரிவித்துள்ளனர்.

  மேலும், வீடியோ கேம்ஸ் விளையாடுவது தங்களது குழந்தைகளுக்கு நல்லதுதான் என பெரும்பான்மையான பெற்றோர்கள் நம்புகின்றனர். இதுகுறித்த மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வும் இதே கூற்றைத் தெளிவுபடுத்துகிறது.

  ஆனால், மருத்துவ உலகம் வீடியோ கேம்ஸ் பாதிப்பு குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகிறது. குழந்தைகளின் நடவடிக்கைகளில் பாதிப்பு, தூக்கமின்மை, நண்பர்கள் இன்மை, ஆர்வமின்மை ஆகியன வீடியோ கேம்ஸ் மூலம் ஏற்படும் விளைவுகள் ஆகும். பெற்றோர்கள் தொடர்ந்து தங்கள் குழந்தைகள் ஆன்லைனில் விளையாடுவதைக் கண்காணித்து கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

  சர்வதேச அளவிலும் குழந்தைகளிடம் வீடியோ கேம்ஸ் ஏற்படுத்தும் தாக்கம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

  மேலும் பார்க்க: கல்யாணமும் வேண்டாம்... குழந்தைகளும் வேண்டாம்!- சிங்கிள்ஸ் வாழ்க்கையை விரும்பும் தென்கொரிய பெண்கள்

  Published by:Rahini M
  First published:

  Tags: Video Games