Home /News /international /

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் சூறாவளி, கனமழை - 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் சூறாவளி, கனமழை - 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் சூறாவளி

பிலிப்பைன்ஸ் சூறாவளி

Philippines Super Typhoon Rai: பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 புயல்கள் மற்றும் சூறாவளிகளால் பிலிப்பைன்ஸ் பாதிக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
    பிலிப்பைன்ஸ் நாட்டில் சூப்பர் சூறாவளி ராய் தாக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கனமழையில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    ராய் என பெயரிடப்பட்ட சூப்பர் சூறாவளி பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதியை தாக்கியது. இதனால் சியர்காவ் மற்றும் சூரிகாவில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. தீவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது கடந்த இரண்டு நாள்களாக தொலைபேசி இணைப்புகள் இல்லாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    சூறாவளி கடந்த போகும் பாதையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 லட்சம் பேரை அரசு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியிருந்தது. இதனால் அதிக அளவில் உயிர்ச் சேதம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் பெருத்த பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.

    கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி , இதுவரை 21 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    ராய் சூறாவளி முதலில் தாக்கிய தினகத் தீவுகள் மற்றப்பகுதிகிளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பெரும்பாலான வீடுகள் தரைமட்டமாகிவிட்டதாகவும் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துவிட்டதாகவும் தினகத் ஆளுநர் ஆர்லீன் பாக்-ஆவ் தெரிவித்துள்ளார்.

    குடிநீர், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள், உடனடியாக வழங்க வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். மற்ற பகுதிகளிலிருந்து தினகத் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் நிலவுகிறது. தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் 18 ஆயிரம் ராணுவத்தினரும் அவசர நிலை ஊழியர்களும் ஈடுப்படுத்தப்பட்டுன்னர்.

    Read Also: மக்களுக்கு சிரிக்கத் தடை விதித்த நாடு.. சத்தமாக அழவும் தடை

    பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 புயல்கள் மற்றும் சூறாவளிகளால் பிலிப்பைன்ஸ் பாதிக்கப்படுகிறது.
    Published by:Yuvaraj V
    First published:

    Tags: Philippines, Typhoon

    அடுத்த செய்தி