Home /News /international /

கொரோனா ரவுன்ட் அப் - தென்னாப்பிரிக்காவில் 5ஆம் அலை, சீனா தலைநகரில் புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா ரவுன்ட் அப் - தென்னாப்பிரிக்காவில் 5ஆம் அலை, சீனா தலைநகரில் புதிய கட்டுப்பாடுகள்

தென்னாப்பிரிக்கா நாட்டில் ஐந்தாவது கோவிட் அலை தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டில் ஐந்தாவது கோவிட் அலை தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டில் ஐந்தாவது கோவிட் அலை தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    சீனாவில் கடந்த சில வாரங்களாக கோவிட்-19 பெருந்தொற்று தலைதூக்கத் தொடங்கியது. அந்நாட்டின் மிகப் பெரிய வர்த்தக நகரமான ஷாங்காய்யில் திடீரென கோவிட் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து மொத்த ஷாங்காய் மாகாணத்தில் முழு லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

    இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிய நிலையில், சர்வதேச வணிக செயல்பாடும் பாதிக்கப்பட்டது. அரசின் கடுமையான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து அங்கு சில நாள்களாக கோவிட் பாதிப்பு குறைந்துவருகிறது.

    ஷாங்காயில் கோவிட் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், தற்போது அந்நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கில் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், பெய்ஜிங் மக்கள் அனைவரும் பொது வெளிக்கு வர வேண்டும் என்றால் கோவிட் பரிசோதனை எடுத்து பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 22ஆம் தேதிக்கு பிறகு பெய்ஜிங் நகரில் 300க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவான நிலையில், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    ஷாங்காய் நகரில் மூன்று வாரத்திற்கு மேல் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெய்ஜிங் நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4,000க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 கோடிக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: உக்ரைன் நாட்டில் நடிகை ஏஞ்சலினா ஜோலி... போரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்

    தென்னாப்பிரிக்கா நாட்டிலும் ஐந்தாவது கோவிட்-19 அலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாராதத்துறை அமைச்சர் ஜோ பாஹாலா தெரிவித்துள்ளார். கடந்த 14 நாள்களாக அங்கு கோவிட் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அங்கு உருமாறிய கோவிட் தொற்று பரவல் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அந்நாட்டில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவான நிலையில், அந்நாட்டின் மருத்துவமனைகள் உஷார் நிலையில் உள்ளன.
    Published by:Kannan V
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி