முகப்பு /செய்தி /உலகம் / குரங்கம்மை பரவல் - தன்பாலின உறவில் ஈடுபடுவோருக்கு WHO முக்கிய அறிவுரை

குரங்கம்மை பரவல் - தன்பாலின உறவில் ஈடுபடுவோருக்கு WHO முக்கிய அறிவுரை

உலக சுகாதார மையம் எச்சரிக்கை

உலக சுகாதார மையம் எச்சரிக்கை

Monkeypox - தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது ஆபத்தானது. இது தொடர்பாக தவறான வதந்திகளை பரப்புவது நோய் பரவல் குறித்த உண்மையை மறைக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு பரவல் வேகமெடுத்து வருகிறது. இதுவரை 78 நாடுகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மங்கிபாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 70 சதவீத பாதிப்பு ஐரோப்பாவிலும், 25 சதவீத பாதிப்பு அமெரிக்காவிலும் ஏற்பட்டுள்ளது. தொற்று பரவல் ஏற்படத் தொடங்கியதில் இருந்து 5 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நோய் பாதிப்பு பரவல் குறித்து இங்கிலாந்து சேர்ந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் படி பாதிக்கப்பட்ட 98 சதவீதம் பேர் தன்பாலின உறவில் ஈடுபடும் ஆண்களே என்பது தெரியவந்துள்ளது. உடல் உறவு மூலம் மட்டுமே இந்த நோய் ஏற்படுவதில்லை என்ற போதிலும், இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகும் பெரும்பான்மையினர் தன்பாலின உறவில் ஈடுபடுபவர்கள் என்பது பல்வேறு ஆய்வுகளில் தெரிகிறது.

இதையடுத்து தன் பாலின உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு அறிவுரை ஒன்றை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பு ஆண்கள் மட்டுமல்லாது, குழந்தைகள், பெண்கள் என பலருக்கும் ஏற்பட்டாலும், தன்பாலின ஆண்களுக்கே அதிகம் காணப்படுவதால், இவர்கள் உறவில் ஈடுபடும் பார்ட்னர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுரை தெரிவித்துள்ளது. அதேவேளை, தன்பாலின ஈர்ப்பாளர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது ஆபத்தானது. இது தொடர்பாக தவறான வதந்திகளை பரப்புவது நோய் பரவல் குறித்த உண்மையை மறைக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: அமானுஷ்ய செயல்கள் நிறைந்த மனநல மருத்துவமனை - நேரில் காண வாய்ப்பு

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,048 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,639ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 3,738 பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. இந்தியாவில் இதுவரை நான்கு பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பாதிப்பு கேரளாவிலும், ஒரு பாதிப்பு டெல்லியிலும் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு உறுதியானவர்கள் சிகிச்சையுடன் 21 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Monkeypox, WHO