லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், கடந்த ஏப்ரல் 27 முதல் ஜூன் 24 வரை பாதிக்கப்பட்ட 528 நபர்கள வைத்து நடத்திய ஆய்வில், நெருக்கமாக இருப்பவர்களின் மூச்சுக்காற்று மூலமும், ஆடைகள் மூலமும் எளிதாக குரங்கம்மை பரவலாம் என தெரியவந்துள்ளது. மேலும் 95 சதவீத குரங்கம்மை பரவலுக்கு பாலியல் நெருக்கங்களே காரணம் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தொற்று பாதித்தவர்களில் 98 சதவீத நபர்கள் ஓரினசேக்கையாளர்கள் அல்லது இருபாலின ஆண்கள் எனவும், 75 சதவீத நபர்கள் வெள்ளையர்கள் எனவும் 41 சதவீதம் பேருக்கு மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் தொற்று இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்களில் அரிப்புடன் 62 சதவீதத்தினருக்கு காய்ச்சலும், 41 சதவீததினருக்கு சோர்வும், 31 சதவீத்தினருக்கு உடல்வலியும், 27 சதவீதத்தினருக்கு தலைவலியும் 56 சதவீதத்தினருக்கு நிணநீர் அழற்சியும் இருப்பது கண்டறியப்பட்டது.
பரிசோதிக்கப்பட்ட 377 நபர்களில், 109 பேருக்கு தொற்று பாலியல் ரீதியாக பரவியுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 32 நபர்களை சோதித்ததில், 29 பேருக்கு விந்தணுக்களில் குரங்கம்மை டி.என்.ஏ இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இதுவரை குரங்கம்மையில் அறியப்படாத புதிய பாதிப்புகளும் உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
சைபில்ஸ் (Syphilis), ஹேர்ப்ஸ் (Herps), போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்தொற்றுக்களின் அறிகுறிகளை போலவே குரங்கம்மைக்கும் அறிகுறிகள் இருக்கும் எனவும், வாய் அல்லது ஆசனவாய் பகுதியில் புண்கள் வருவதும் இதன் அறிகுறிகள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மேலும் இந்த தொற்று தவறாக கண்டறியப்படலாம் எனவும், பலர் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வந்ததாகவும், சுகாதார மருத்துவர்களுக்கு இந்த தொற்றை பற்றி கற்பிக்க வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்த தொற்றை கண்டறியாவிட்டால், இதை குணப்படுத்துவது கடினம் எனவும் கூறினர்.
இதை பற்றி, குயின் மேரிஸ் பல்கலைகழக எச்.ஐ.வி. பேராசிரியர் சோல் ஓர்கின், “இந்த தொற்றை கண்டறிவது மிகவும் முக்கியம், இதுவரை குரங்கம்மைக்கு கொடுக்கப்பட்ட விளக்கங்களுடன் மேலும் விளக்கங்களை சேர்க்க வேண்டும்” என்றும் “வாய்புண்கள், சளி, அல்சர் போன்ற இதன் அறிகுறிகள் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தலாம்” என தெரிவித்தார்.
Read more : ‘மங்கி பாக்ஸ்’ தொற்றால் யாருக்கெல்லாம் ஆபத்து..? இவங்க எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..!
பாலியல் ஆரோக்கிய மருத்துவர் ஜான் தான்ஹில் இதை பற்றி, “விந்தணுக்களில் குரங்கம்மைக்கான டி.என்.ஏவை நாங்கள் கண்டறிந்தது உண்மைதான். ஆனால், பாலியல் உறவில் பரவுகின்ற அளவு இதன் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்பதை நாங்கள் இன்னும் ஆராய வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.
மேலும் இந்த ஆராய்ச்சி வருங்காலத்தில் இந்த தொற்றை கண்டறிய உதவியாக இருக்கும் எனவும், பாதிப்பை குறைக்கவும், தடுப்பூசி கண்டறியவும் இது உதவியாக இருக்கும் எனவும் அந்த குழு தெரிவித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Monkeypox