மங்கிபாக்ஸ் வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாராத அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அதில், இதுவரை 29 நாடுகளில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு மங்கிபாக்ஸ் வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. எனவே, மேற்கண்ட நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை கூர்ந்து கவனித்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியுங்கள். இதுவே, பரவலை தடுக்க வழி எனக் கூறியுள்ளார்.
இதுவரை மங்கிபாக்ஸ் நோயால் யாரும் உயிரிழக்கவில்லை. இருந்தாலும் ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமே காணப்பட்ட இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது. எனவே, மேற்கண்ட நாடுகள் நோய் பரவல் ஆபத்தில் தற்போது உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதை தடுக்க வைரஸ் இருந்தாலும் அதன் எண்ணிக்கை தற்போது குறைந்த அளவே உள்ளது எனக் கூறியுள்ள சுகாதார அமைப்பு, பாதிப்புக்குள்ளன 29 நாடுகளில் நோயை தடுக்க மாபெரும் அளவில் தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்துவது அவசியம் என்றுள்ளது.
இந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும். வீட்டிலும் மற்ற நபர்களிடம் தொடர்பு கொள்ள கூடாது என உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்கள் இந்த மங்கிபாக்ஸ் வைரசிடம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் முழுவதும் தோள்களில் புண் மற்றும் வீக்கம் ஏற்படுதல் இந்த நோயின் அறிகுறி. இத்துடன் காய்ச்சல், தலை மற்றும் உடல் வலி போன்றவை ஆரம்ப நாள்களில் இருக்கும்.
இதையும் படிங்க:
வரலாற்றில் முதல்முறையாக கேன்சர் மருந்து சோதனை வெற்றி.. முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு
1958ம் ஆண்டு கோபன்ஹேகனில் உள்ள ஸ்டேட் சீரம் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடையே பரவிய இந்த நோய் மனிதர்களிடையே 1970ம் ஆண்டு காங்கோவில் பரவத்தொடங்கியுள்ளது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் ‘மங்கி பாக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. மங்கி பாக்ஸ் வைரஸ் Poxviridae குடும்பத்தில் உள்ள Orthopoxvirus இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பெரியம்மை, பசு, குதிரை மற்றும் ஒட்டகம் போன்றவற்றில் இருந்து பரவும் பாக்ஸ் நோயைச் சார்ந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.