குரங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயகரமான வைரஸ்...! ஜப்பானில் பாதிக்கப்பட்டவிஞ்ஞானி

குரங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயகரமான வைரஸ்...! ஜப்பானில் பாதிக்கப்பட்டவிஞ்ஞானி
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 30, 2019, 4:45 PM IST
  • Share this:
ஜப்பானில் குரங்கிலிருந்து பரவும் ஹெர்பஸ் பி (Herpes b) வைரசால் விஞ்ஞானி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானின் ககோஷிமா நகரத்தில் குரங்குகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த அவருக்கு இந்த அபாயகரமான வைரஸ் பரவியுள்ளது.

குரங்கள் கடித்தாலோ அல்லது நகங்களால் கீறினாலோ மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் ஜப்பானிய விஞ்ஞானிக்கு எப்படி பரவியது என்பது குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.


விலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத இந்த வைரஸ் மனிதர்களின் மூளை மற்றும் முதுகெலும்பில் வீக்கத்தை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக அளவில் கடந்த 90 ஆண்டுகளில் 50 பேர் மட்டுமே ஹெர்பஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் ஜப்பானில் ஒருவர் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை.

Also see...
First published: November 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்