Monkey B Virus | சீன மருத்துவரின் உயிரைக் குடித்த 'குரங்கு பி'வைரஸ் - அலெர்ட் செய்யும் சீனா

மாதிரிப்படம்

‘குரங்கு பி’ வைரஸ் மனிதர்களை தாக்கும் போது 1 முதல் 3 வாரங்களில் அறிகுறிகள் தென்படும்.

  • Share this:
    பொருள்களை ஏற்றுமதி செய்வது போல் சீனாவில் இருந்து அடுத்தடுத்த வைரஸ்கள் வெளிவருகிறது.  சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்-க்கே உலக நாடுகள் விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் சீனாவில் குரங்கு பி வைரஸ் தாக்கி கால்நடை மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சீனாவை சேர்ந்த 53 வயதான கால்நடை மருத்துவர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்துள்ளார். சில வாரங்களுக்கு பிறகு அவருக்கு குமட்டல் ,வாந்தி, காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நரம்பு பாதிப்பால் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த மே மாதம் 27-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் ‘குரங்கு பி’ ( Monkey B virus (BV)) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மகாக்ஸ் வகை குரங்குகளில் 1932-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தாக்கி சீனாவில் மனிதர்கள் உயிரிழப்பது இதுவே முதன்முறை என்பதால் அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை வைரஸானது குரங்குகளின் கழிவுகள் மற்றும் சுரப்பிகள் மூலம் பரவுவதாக கூறப்படுகிறது. இறப்பு சதவிகிதம் அதிகம் என்றும் கூறுகின்றனர்.

    இறந்த மருத்துவரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருங்கி பழகிய நபர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தனர். இதில் யாருக்கும் நோய் தொற்று இல்லை எனவும் அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக அந்நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

    இந்த வைரஸ் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த குரங்கு பி வைரஸ் 1932-ம் ஆண்டு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகளின் படி, மனிதர்களுக்கு அரிதாகவே இந்த நோய்த்தாக்கம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.1932-ம் ஆண்டு இது கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 50 பேர் மட்டுமே இந்த வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதில் 21 நபர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    குரங்குகளிடம் கடி படுதல் அல்லது குரங்குகளால் ஏற்படும் காயங்கள் மூலம் பரவுகிறது. குரங்குகளின் கழிவுகள் தோலில் வெளியேறும் திசுக்களால் இந்த நோய் பரவுவதாக கூறப்படுகிறது. இது குரங்குகளிடையே தொற்று போல் பரவி மரணத்தை ஏற்படுத்துகிறது.

    இந்த வைரஸானது உமிழ்நீர், மலம், சிறுநீர், மூளை மற்றும் முதுகெலும்பி திசுக்களின் காணப்படுகிறது. இந்த வைரஸானது சில மணி நேரம் உயிர்வாழக்கூடியது. வைரஸ் உயிர்வாழும் பகுதி ஈரப்பதம் நிறைந்ததாக இருக்கும். இந்த வைரஸானது கால்நடை பராமரிப்பவர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஆய்வகங்களில் பணியாற்றுபவர்களை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    ‘குரங்கு பி’ வைரஸ் மனிதர்களை தாக்கும் போது 1 முதல் 3 வாரங்களில் அறிகுறிகள் தென்படும். காய்ச்சல், சோர்வு, அரிப்பு,தசைவலி, காயங்கள் ஆகியவை இந்நோய் குறித்த அறிகுறிகளாகும். நாளடைவில் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும். குரங்கு உள்ளிட்ட மிருகங்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், ஆய்வு மைய பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும்படி சீனாவின் நோய் கட்டுப்பாடு தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: