சீனாவில் குரங்கு ஒன்று சிறுமியை பலமாக தாக்கி அவளை கடத்திச் செல்ல முயன்றுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தென்மேற்கு சீனாவில் உள்ள சுங்கிங் நகராட்சியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தெருவில் சிறுமி சென்று கொண்டிருந்தபோது அவரது உயரம் அளவுக்கு இருக்கும் குரங்கு மெதுவாக ஓடி அவரை தாக்கியது. தலையை பலமாக பிடித்து இழுத்தபோதிலும் அதிர்ஷ்டவசமாக பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
தரையில் சிறுமியை இழுத்துப் போட்ட பின்னர் அவரை தரதரவென்று இழுத்துச் செல்ல குரங்கு முயன்றது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வந்து சிறுமியை குரங்கிடம் இருந்து மீட்டனர்.
குரங்கு பலமாக தாக்கியதில் சிறுமியின் தலையில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் உள் காயங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக சிறுமிக்கு தடுப்பூசியை மருத்துவர்கள் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க - 2 ஆண்குறியுடன் வாழ்ந்து வந்த சிறுவன்... அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய டாக்டர்கள்
விசாரணையில் சிறுமியின் தாயார் லியூ, வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது சிறுமி வெளியே சென்றுள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த காட்சிகள் பக்கத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க - இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் 100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்-அதிர்ச்சியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!
இதே குரங்கு கடந்த ஆண்டு மே மாதமும் இந்த பகுதிக்கு வந்ததாகவும், அப்போது சிலரை தாக்கியதாகவும் சுங்கிங் நகர மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த குரங்கு மீண்டும் வரக்கூடும் என்று அச்சம் தெரிவித்த அவர்கள், அதனை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.