மோமோ இறந்து விட்டதாம்... உருவாக்கியவர் கூறுகிறார்...!

ஜப்பானைச் சேர்ந்த கெய்சுகே ஐசோ. ஜப்பானிய புராணங்களில் வரும் உபுமே என்ற பேய் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு அந்த உருவத்தை தயாரித்ததாக ஐசோ கூறியுள்ளார்.

news18
Updated: March 5, 2019, 10:23 AM IST
மோமோ இறந்து விட்டதாம்... உருவாக்கியவர் கூறுகிறார்...!
மோமோ சேலஞ்சில் இடம்பிடித்த உருவம்
news18
Updated: March 5, 2019, 10:23 AM IST
கடந்த ஆண்டு பரபரப்பை கிளப்பிய மோமோ சேலஞ்ச் விவகாரத்தில் இடம்பெற்ற பொம்மையை உருவாக்கிவர், அதனை அழித்துவிட்டதாக கூறியுள்ளார்.

2017-ம் ஆண்டில் ப்ளூவேல் என்ற கேம் பள்ளி மாணவகள் மத்தியில் பரவி, அவர்களை தற்கொலைக்கு தூண்டியது. இதனால், இந்தியா உள்பட உலக நாடுகளில் பலரும் தற்கொலை செய்து கொண்டனர்.

ப்ளூவேல் விளையாட்டைப் போல கடந்தாண்டு மோமோ சேலஞ்ச் என்ற விளையாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் மோமோ என்ற பெயரில் கணக்கு இருக்குமாம். அந்த கணக்கு மூலம் பயனர்களுக்கு மோமோ, தெரியாத பல எண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள சொல்லுமாம்.

பின்னர் மோமோ, பல உத்தரவுகளை பிறப்பிக்குமாம். அப்போது பயனர்கள் மோமோ-வுக்கு அடிபணிய மறுத்தால், மிகவும் அச்சப்படும் வகையிலான புகைப்படங்கள் அனுப்பப்படுமாம் என்று கூறப்பட்டது.

எனினும், இந்த கேம் மூலம், மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, அதன் மூலம் கொள்ளையில் ஈடுபடுவது தான் நோக்கமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த கேமில் ஒரு அகோரமான முகம் கொண்ட பெண்ணின் உருவம் வருகிறது.

இந்த உருவத்தை உருவாக்கியது ஜப்பானைச் சேர்ந்த கெய்சுகே ஐசோ. ஜப்பானிய புராணங்களில் வரும் உபுமே என்ற பேய் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு அந்த உருவத்தை தயாரித்ததாக ஐசோ கூறியுள்ளார்.

இந்நிலையில், தான் உருவாக்கிய அந்த பேய் உருவத்தை அழித்துவிட்டதாக ஐசோ தெரிவித்துள்ளார். “யாரையும் பயமுறுத்த அதை நான் வடிவமைக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also See...

First published: March 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...