முகப்பு /செய்தி /உலகம் / தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவு - அதிர்வில் குலுங்கிய ரயில் மற்றும் சரிந்த கட்டிடங்கள்

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவு - அதிர்வில் குலுங்கிய ரயில் மற்றும் சரிந்த கட்டிடங்கள்

நிலநடுக்கத்தில் சேதம் அடைந்த கட்டிடங்கள்

நிலநடுக்கத்தில் சேதம் அடைந்த கட்டிடங்கள்

தைவானில் ஏற்ப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தருணங்கள் வீடியோவாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaTaiwanTaiwanTaiwanTaiwan

தைவான் பிராந்தியத்தை 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. நிலநடுக்க அதிர்வில், நின்றுகொண்டு இருக்கும் ரயில் மற்றும் கட்டிடங்கள் குலுங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.  மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக  உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்று தைவான் அரசு கூறியுள்ளது.

தைவானில் தெற்கு பகுதியில் மக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வானிலை மையம் தெரிவிக்கையில் டைடுங் பகுதியில் சனிக்கிழமை மையம் கொண்டிருந்த நடுக்கம் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கமாகத் தைவானைத் தாக்கியுள்ளது என் கூறியுள்ளது.

தற்போது நிலநடுக்கத்தின் தருணங்கள் வீடியோவாக இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் நின்றுகொண்டு இருக்கும் ரயில் குலுங்குவதும், சாலையில் மரங்கள் சரிவதும் மேலும் வீட்டில் பொருட்கள் அதிர்வில் நகர்வதும் தெரிகிறது.

அமெரிக்கா புவியியல் ஆய்வு மையத்தில் தைவான் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ரயில்கள் தடம் புரண்டுள்ளது. மேலும் கடைகள் இருக்கும் கட்டிடங்கள் இடிந்து சரிந்துள்ளது.

Also Read : நேபாளத்தில் கொட்டித்தீர்த்த கனமழை.. வடியாத வெள்ளம் - 13 பேர் பலி, பலர் மாயம்!

நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதம் இல்லையென்றும் ஆனால் இடிந்த கட்டிடத்தில் இருவர் சிக்கிக்கொண்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

First published:

Tags: Earthquake, Taiwan, Viral Video