Home /News /international /

இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக மாற்ற நடவடிக்கை - பிரதமர் மோடி

இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக மாற்ற நடவடிக்கை - பிரதமர் மோடி

சீன அதிபர் - பிரதமர் மோடி

சீன அதிபர் - பிரதமர் மோடி

கல்வான் பள்ளத்தாக்கு மோதலை அடுத்து, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை முதல்முறை சந்தித்த நிலையில், அவரை பார்த்து புன்னகைக்கேவோ, பரஸ்பரம் கை குலுக்கவோ இல்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக, ஷாங்காய் ஒத்துழைப்பு என மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உட்பட 8 நாடுகளை கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், 22-வது உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக சமர்கண்ட் சென்றடைந்த பிரதமர் மோடியை, உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்சியோயே வரவேற்றார்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களை வரவேற்கும் விதமாகவும், சமர்கண்ட் நகரில் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. அத்துடன், ரஷ்ய அதிபா விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோருக்கு ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தொடங்கியதை அடுத்து, 8 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டு அரங்கிற்கு வெளியே குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    பின்னர், மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தற்போது மீண்டு வருவதாகவும், கோவிட் மற்றும் உக்ரைன் போர் பிரச்னை காரணமாக சர்வதேச அளவில் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார். இந்தியாவை உற்பத்தியின் மையமாக மாற்றும் நோக்கில், உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7 புள்ளி 5 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

    மாநாட்டிற்கு இடையே பிரதமர் மோடி, ரஷ்ய அதிபரை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உக்ரைன் விவகாரம் மற்றும் அதுதொடர்பான கவலைகள் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை அறிவேன் என்று புதின் தெரிவித்தார். அனைத்து பிரச்னைகளும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும், புதின் கூறினார்.

    முன்னதாக, துருக்கி அதிபர் தையிப் எர்டோகனை சந்தித்த பிரதமர் மோடி இரு நாடுகள் உறவு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    ஷாங்காய் மாநாட்டின் போது, புதின் மற்றும் ஜி ஜின்பிங் உள்ளிட்டோரும் உரையாற்றினர். இதில், உக்ரைன் போர் விவகாரம் குறித்து ஜி ஜின்பிங், சீனாவின் நிலைப்பாடு குறித்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்காதது ரஷ்யா மற்றும் புதின் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

     



    இதனிடையே, புதினை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஷெபாஸ் ஷெரீப், தனக்கான இயர்போனை காதில் மாட்ட முடியாமல் தடுமாறியதை கண்டு, புதின் வாய்விட்டு சிரித்தார். கல்வான் பள்ளத்தாக்கு மோதலை அடுத்து, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை முதல்முறை சந்தித்த நிலையில், அவரை பார்த்து புன்னகைக்கவோ, பரஸ்பரம் கை குலுக்கவோ இல்லை. இருந்த போதும், அடுத்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் 23-வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுவதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்
    Published by:Anupriyam K
    First published:

    Tags: China, India, Modi, Xi jinping

    அடுத்த செய்தி