உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். துணை அதிபராக சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய வெற்றியை இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பெரிதும் கொண்டாடினர். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய நேரப்படி 10.10 மணி அளிவில் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்.
புதிதாக பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பதிவிட்ட மோடியின் ட்விட்டர் பதிவில், ‘அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். இந்தியா, அமெரிக்கா உறவை பலப்படுத்தும் வகையில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்த்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவில், ‘ஜனநாயகத்தின் புதிய அத்தியாயத்திற்காக அமெரிக்காவுக்கு வாழ்த்துகள். அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகள்’என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்