இந்தியாவில் குளிர்பானத்தை விட 1 ஜிபி டேட்டாவின் விலை குறைவு - பிரதமர் மோடி

எலெக்ட்ரானிக் மற்றும் ஆட்டோமொபைல் தயாரிப்பில் உலக அளவிலான சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி ஜப்பானில் பேசிய நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: October 29, 2018, 10:18 AM IST
இந்தியாவில் குளிர்பானத்தை விட 1 ஜிபி டேட்டாவின் விலை குறைவு - பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Web Desk | news18
Updated: October 29, 2018, 10:18 AM IST
இந்தியாவில் குளிர்பானத்தை விட ஒரு ஜி.பி. டேட்டா விலை குறைவாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, டோக்கியோவில் ஜப்பான் வாழ் இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், டிஜிட்டல் கட்டமைப்பில் இந்தியா மிகப்பெரிய புரட்சியை உருவாக்கி வருவதாக கூறினார். இந்தியாவில் 100 கோடிக்கு மேல் செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்ட மோடி, மேக் இன் இந்தியா திட்டம் உலக அடையாளமாக மாறி வருவதாக தெரிவித்தார்.

ஜப்பானில் தலைவர்களுடன் பேசிய மோடி


மேலும் எலெக்ட்ரானிக் மற்றும் ஆட்டோமொபைல் தயாரிப்பில் உலக அளவிலான சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது எனக்கூறிய மோடி, செல்போன் தயாரிப்பில் முதலிடத்தை நோக்கி விரைவில் முன்னேறுவோம் என்றும் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர்,  கடந்த ஆண்டு நமது விஞ்ஞானிகள் 100-க்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.நிகழ்ச்சிக்கு முன்னதாக அங்கிருந்தவர்களுடன் பிரதமர் மோடி செல்பி எடுத்துக்கொண்டார்.

 

Also see...

First published: October 29, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...