அமெரிக்க நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி- ரூ.2,700 வரை விலை நிர்ணயம்

கொரோனாவுக்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த மாடெர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு 2,750 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி- ரூ.2,700 வரை விலை நிர்ணயம்
மாடெர்னா தடுப்பூசி
  • Share this:
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை உலக அனைத்தையும் அச்சுறுத்திவருகிறது. இதுவரையில்,  5,86,00,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் அனைத்து பெருநாடுகளும் முயற்சி செய்துவருகின்றன.

இந்தநிலையில், அமெரிக்காவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மாடெர்னா நிறுவன தலைமை நிர்வாகி ஸ்டீபன் பன்செல் (Stephane Bancel ), தங்கள் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் 1,854 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2,744 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்ய உள்ளதாகக் கூறினார். தடுப்பூசி கொள்முதல் அளவை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும் எனக் கூறிய அவர், ஐரோப்பிய யூனியனுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.


மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசி கொரோனாவை அழிப்பதில் 94.5 சதவீதம் வெற்றிகரமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த தடுப்பூசியை வாங்குவதற்கு ஐரோப்பிய யூனியன் தரப்பில் அண்மையில் பேச்சுவார்த்தை தொடங்கியது.
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading