முகப்பு /செய்தி /உலகம் / அமெரிக்காவில் மீண்டும் கோர துப்பாக்கிச்சூடு சம்பவம் - 6 பேர் பரிதாப பலி.. அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம்

அமெரிக்காவில் மீண்டும் கோர துப்பாக்கிச்சூடு சம்பவம் - 6 பேர் பரிதாப பலி.. அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம்

2023ஆம் ஆண்டு தொடங்கி 48 நாள்கள் தான் கடந்துள்ள நிலையில் அதற்குள்ளாகவே 73 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளன என அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaWashingtonWashingtonWashington

துப்பாக்கி கலாச்சாரம் மோசமாக உள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அந்நாட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் துப்பாக்கி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் மிஸிசிப்பி மாகாணத்தில் நேற்று கோர துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மிஸிசிப்பி மாகாணத்தில் உள்ள அர்கபட்லா நகரில் அடையாளம் தெரியாத நபர், அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நிகழ்த்தினார்.

இதில் கடை, வீடு என வெவ்வோர் இடங்களில் 6 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர். அவரது பெயர் ரிச்சர்ட் டாலே எனவும் வயது 53 என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவரிடம் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனத்துடன் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், "போதும்.. 2023ஆம் ஆண்டு தொடங்கி 48 நாள்கள்தான் கடந்துள்ளது. அதற்குள்ளாகவே 73 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளன. வெறும் இரங்கல், கவலைகள் மட்டுமே இதற்கு தீர்வை தராது. துப்பாக்கிச் சட்டத்தில் பல சீர்திருத்தங்களை நாம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்" என்றார்.

First published:

Tags: Crime News, Gun shot, Us shooting, USA