Home /News /international /

வழிதவறிய இங்கிலாந்து புறா - கவலையில் ஆழ்ந்த உரிமையாளர்... இறுதியில் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

வழிதவறிய இங்கிலாந்து புறா - கவலையில் ஆழ்ந்த உரிமையாளர்... இறுதியில் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

 இங்கிலாந்து புறா

இங்கிலாந்து புறா

UK Pigeon : வழிதவறி வந்த இங்கிலாந்து புறா பத்திரமாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    புறாக்கள் பெரும்பாலும் நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்தாலும் கூட மீண்டும் அது வசிக்கும் பழைய இடத்திற்கே திரும்பி செல்லு வழியை கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை. ஆனால் ஒரு புறா மீண்டும் அதன் வசிப்பிடம் அல்லது உரிமையாளரிடம் திரும்பி செல்லாமல் திசை மாறி வேறு நாட்டில் இறங்கினால் என்ன செய்வது?

    அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் நடந்துள்ளது. சுமார் 3 வாரங்களுக்கு முன் Bob என்ற விலைமதிப்பற்ற பந்தய புறா சேனல் தீவுகளில் (Channel Islands) உள்ள குர்ன்சியில் ( Guernsey) இருந்து இங்கிலாந்தின் வடகிழக்கில் உள்ள அதன் வசிப்பிடமான கேட்ஸ்ஹெட் (Gateshead) வரை சுமார் 400 மைல் (644 கிமீ) பாதையில் புறப்பட்டது. இந்த தொலைவுக்கான புறாவின் பயண நேரம் பயணம் சுமார் 10 மணி நேரம் என மதிப்பிடப்பட்டிருந்தது.

    இருப்பினும் அந்த குறிப்பிட்ட புறா இலக்கு இடத்திற்கு சென்று சேரவில்லை. காணாமல் போன புறாவுக்கு என்ன நடந்தது, எங்கு போனது என்பதை கண்டறிய முடியவில்லை. இந்த புறாவுக்கு 4 வயதாகிறது. இருப்பினும் மெக்ஸியா, மன்ரோ கவுண்டி, அலபாமாவில் வசிக்கும் ஒரு முதியவர் தனது தோட்டத்தில் Bob-ஐ கண்டுபிடித்ததன் மூலம் இந்த கேள்விக்கான பதில் கடந்த வாரம் கிடைத்தது.

    ALSO READ | மாதம் ஒரு பீசா.. ஷாப்பிங்.. தினமும் சேலை அணியனும்.. ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த மணமக்கள்

    விலைமதிப்பற்ற புறா தனது தோட்டத்தை விட்டு வெளியேற மறுத்ததால்  முதியவர் உள்ளூர் அனிமல் ஷெல்டரான Monroe County Animal Shelter-க்கு தகவல் கொடுத்து உள்ளார். தற்போது 1,000 பவுண்டுகளுக்கு மேல் மதிப்புள்ள இந்த புறா அலபாமாவின் Monroe-லியில் உள்ள விலங்கு தங்குமிடம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    Bob புறா அடையாளம் காணப்பட்டது எப்படி?

    Bob தனித்துவமான லெக் பேண்ட்ஸ்களை (leg bands) காலில் கண்ட அந்த விலங்கு தங்குமிட நிர்வாகத்தினர், இந்த புறா கடலின் மறுபுறத்தில் இருக்கும் யுனைட்டட் கிங்டம் நாட்டிலிருந்து வந்திருக்க கூடும் என்பதை யூகித்தனர். இதனை தொடர்ந்து விலங்குகள் காப்பகத்தில் உள்ள குழு, புறாவை அவரது உரிமையாளருடன் இணைக்கும் முயற்சிக்காக புறாவின் போட்டோவை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து, அது பராமரிக்கப்படும் இடம் தொடர்பான தகவல்களையும் ஷேர் செய்தனர்.



    தொடர் முயற்சிகளின் பலனாக இங்கிலாந்தின் Winlaton-ல் வசிக்கும் ஆலன் டோட் என்பவருக்கு சொந்தமானது தான் இந்த புறா என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் வெப்கேம் மூலம் Bob தனது உரிமையாளரை பார்த்து மகிழ்ந்தது.

    இத்தனை நாட்கள் தனது புறாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்த ஆலன் டோட், தனது புறாவை மீண்டும் வீட்டிற்கு கொண்டுவர யுனைட்டட் கிங்டம்மில் இருந்து அமெரிக்காவிற்கு பயணிக்க திட்டமிட்டுள்ளார். ஆம், சுமார் 4000 மைல்களுக்கு மேல் பறந்து சென்ற Bob புறா கண்டறியப்பட்டது அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள Monroe என்ற மாகாணத்தின் அலபாமாவில் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Trending, Viral

    அடுத்த செய்தி