71ஆவது பிரபஞ்ச அழகிப்போட்டி அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடந்தது. இந்த போட்டியில் 80க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பிரபஞ்ச அழகி கிரீடத்திற்காக போட்டியிட்டனர். இறுதி சுற்றுக்கு அமெரிக்கா, வெனிசுலா, டொமினிக் குடியரசு நாடுகளை சேர்ந்த அழகிகள் முன்னேறினர். இந்த இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த 28வயதான ஆர்’போனி கேப்ரியல் வெற்றி பெற்று 2022 பிரபஞ்ச அழகி பட்டத்தை தட்டிச் சென்றார்.
கடந்த முறை பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் சந்து ரூ.45 கோடி மதிப்பிலான கிரீடத்தை புதிய பிரபஞ்ச அழகிக்கு சூட்டி வாழ்த்தினார். இறுதி சுற்றில் வெற்றிக்கான கேள்வியும் அதற்கு வெற்றி பெற்ற ஆர்’போனி கேப்ரியல் அளித்த பதிலும் தற்போது டிரெண்டாகி வருகிறது. நீங்கள் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றால் அதன் மூலம் மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் எப்படி செயலாற்றுவீர்கள் என ஆர்’போனி கேப்ரியலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், "நான் மாற்றத்திற்கான தலைவராக செயல்படுவேன். டிசைனிங் மற்றும் தையல் தொழில் நான் 13 ஆண்டுகளாக ஈடுபடுகிறேன். நன்மைக்கான ஆற்றலாக நான் பேஷன் தொழிலை பார்க்கிறேன். சுற்றுசூழலுக்கு மாசு வராத வண்ணம் மறுசுழற்சி முறையிலான பொருள்களையே நான் தையல் தொழிலில் பயன்படுத்துகிறேன். மேலும், குடும்ப வன்முறை, கடத்தல் போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களை நான் மீட்டு பணிக்கு ஈடுபடுத்துகிறேன். பிறர் வாழ்வில் மாற்றத்திற்கான விதையை விதைத்து அவர்களை மாற்றிக்காட்டுவதன் மூலம் நாம் மாற்றத்தின் கருவியாக இருக்கிறோம்." இவ்வாறு அவர் பதில் அளித்தார். இதுவே அவர் பட்டத்தை வெல்வதற்கான பதிலாகவும் அமைந்தது.
The new Miss Universe is USA!!! #MISSUNIVERSE pic.twitter.com/7vryvLV92Y
— Miss Universe (@MissUniverse) January 15, 2023
பிலிபினோ அமெரிக்கர்கள் வம்சாவளியைச் சேர்ந்த ஆர்’போனி கேப்ரியல் மாடல் அழகி, ஆடை வடிவமைப்பாளர், தையல் பயிற்றுவிப்பாளராக இருக்கிறார்.அதுமட்டுமின்றி தனது பணியில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.இந்தியா சார்பில் பங்கேற்ற திவிதா ராய்(Divita Rai) முதல் 16 இடங்களுக்குள் முன்னேறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fashion, Miss Universe