ஜமைக்கா பெண் டோனி அன் சிங் உலக அழகியாக தேர்வு!

ஜமைக்கா பெண் டோனி அன் சிங் உலக அழகியாக தேர்வு!
  • News18 Tamil
  • Last Updated: December 15, 2019, 11:39 AM IST
  • Share this:
2019ம் ஆண்டுக்கான உலக அழகியாக ஜமைக்காவின் டோனி அன் சிங் தேர்வாகியுள்ளார்.

69 ஆவது உலக அழகி போட்டி லண்டனில் உள்ள எக்ஸெல் மையத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. இதில் 120க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். பல்வேறு கட்டமாக நடைபெற்ற போட்டிகளுக்கு பிறகு, ஜமைக்கா, இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றனர்.

இந்த இறுதிச்சுற்றில் ஜமைக்காவைச் சேர்ந்த டோனி அன் சிங் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டு அழகி பட்டம் வென்ற வெனீசா கிரீடம் சூட்டினார்.


First published: December 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்