இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு

Breaking News

கொழும்புவின் புறநகர் பகுதியான புகோடாவில் உள்ள நீதிமன்றத்தின் அருகே உள்ள காலி இடத்தில் குண்டுவெடித்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள புகோடா என்ற பகுதியில் இருக்கும் நீதிமன்றம் அருகே இன்று காலை வெடிகுண்டு வெடித்துள்ளது. இதனால், உயிர்ச்சேதம் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

  இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  குண்டு வெடிப்பு நடக்கவுள்ளது என்று இந்திய உளவுத்துறை எச்சரிக்கை அளித்த பிறகும், இலங்கை அரசு அலட்சியமாக இருந்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த பதற்றத்தில் இருந்து மீளாத இலங்கையில், இன்று காலை மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

  கொழும்புவின் புறநகர் பகுதியான புகோடாவில் உள்ள நீதிமன்றத்தின் அருகே உள்ள காலி இடத்தில் குண்டுவெடித்துள்ளது.

  இதில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

  Published by:Sankar
  First published: