போலீசாரால் கொல்லப்பட்ட கருப்பின இளைஞர் - அமெரிக்காவில் பல இடங்களில் போராட்டம்

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல இடங்களில் கலவரம் வெடித்துள்ளது.

போலீசாரால் கொல்லப்பட்ட கருப்பின இளைஞர் - அமெரிக்காவில் பல இடங்களில் போராட்டம்
REUTERS
  • Share this:
ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கடந்த 25-ம் தேதி மின்னபொலிஸ் போலீஸ் கைது செய்யும்போது உயிரிழந்தார்.

ஆயுதங்களின்றி தரையில் கிடந்த ஜார்ஜின் கழுத்தில் போலீஸ் டெரிக் சவின் என்பவர் மண்டியிட்டதாலேயே ஜார்ஜ் உயிரிழந்தாக கூறி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

போலீஸ் வாகனங்கள், வங்கிகள், உணவகங்கள், மின்னபொலிஸ் காவல்நிலையம் என பல இடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். வாஷிங்க்டன், ஜியார்ஜியா,நியுயார்க்,புளோரிடா,  டெக்சாஸ் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகளவில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Also read... ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம்... வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட டிரம்ப் உத்தரவு


Also see...
First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading