ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம்: தாங்குவார்களா மக்கள்? :கடும் விளைவுகளைச் சந்திப்பீர்கள்: மியான்மர் ராணுவத்துக்கு ஜோ பைடன் எச்சரிக்கை

ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம்: தாங்குவார்களா மக்கள்? :கடும் விளைவுகளைச் சந்திப்பீர்கள்: மியான்மர் ராணுவத்துக்கு ஜோ பைடன் எச்சரிக்கை

ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஜனநாயக மரபுகள் காக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் முடிவுகளை முறியடிக்கும் சக்திகளை கடுமையாக எச்சரிக்கிறோம் என்றார்

  • Share this:
    ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மியான்மர் அரசைக் கவிழ்த்து ராணுவப்புரட்சியினால் அங்கு ராணுவம் ஆட்சியைப் பிடித்துள்ளது, மக்கள் தலைவர் பெண் சிங்கம், நோபல் அமைதிப் பரிசு வென்ற ஆங் சான் சூகியுடன் பிற ஜனநாயகத் தலைவர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

    தேர்தலில் மோசடி செய்ததாக தேசிய ஜனநாயக லீக் கட்சியினரைக் கைது செய்ததாக மியான்மர் ராணுவம் கூறுகிறது. இப்போது ஆட்சியதிகாரம் ராணுவத் தளபதி மின் ஆங் லெய்ங்கிடம் உள்ளது. இவர் வந்தவுடன் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்துள்ளார். தற்போதைய கேள்வி மியான்மர் மக்கள் இந்த நெருக்கடி நிலை அடக்குமுறைகளைத் தாங்குவார்களா என்பதே.

    யாங்கூனில் ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் நிலையெடுத்து வரிசைக் கட்டி நிற்கின்றனர். தேசிய ஜனநாயக லீக் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் மொபைல் இண்டெர்நெட் என்று தகவல் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் முடிந்து ஜனநாயக அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே ராணுவத்துக்கும் அரசுக்கும் மோதல் இருந்து வந்தது, எப்போது வேண்டுமானாலும் ராணுவப் புரட்சி வெடிக்கலாம் என்ற நிலை இருந்தது.

    இந்நிலையில் ராணுவ அடக்குமுறைகள் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது மீண்டும் தலைவிரித்தாடும் என்று அவர்கள் மத்தியில் அச்சமேற்பட்டுள்ளது. பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள் இன்னும் அகதிகள் வருகை அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.



    எனவே உலகநாடுகள் இந்த ராணுவப்புரட்சியை முறியடித்து ராணுவ தலைவரைக் கைது செய்து ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று ரோஹிங்கிய முஸ்லிம்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஜனநாயக மரபுகள் காக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் முடிவுகளை முறியடிக்கும் சக்திகளை கடுமையாக எச்சரிக்கிறோம் என்றார்.

    “சமீபத்திய தேர்தல் முடிவுகளை மாற்றும் எந்த ஒரு சக்தியையும் அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது. மியான்மரின் ஜனநாயக மாற்றத்துக்கு தடை ஏற்படுத்த அனுமதியோம். இப்போது ராணுவப்புரட்சியை வாபஸ்பெற்று தலைவர்களை விடுதலை செய்யவில்லை எனில் கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டி வரும்” என்று பைடன் எச்சரிக்கை விடுத்துள்லார்.

    ஐநா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் மியான்மர் ராணுவப்புரட்சிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

    முதலில் மியான்மர் ராணுவம் ஜனநாயகபூர்வமான தேர்தல்களைக் காப்போம் என்றது. ஆனால் திடீரென புரட்சி செய்து ஆட்சியைக் கலைத்து தலைவர்களைக் கைது செய்தது.

    முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கீழ் இருந்த கிழக்காசியத் தூதர் டேனியல் ரஸல் என்பவர் இன்னொரு ராணுவப்புரட்சி மியான்மரை புரட்டிப் போட்டு விடும் என்று எச்சரித்தார்.

    மியான்மர் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று ராணுவப்புரட்சியை அடுத்து மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் கோரிக்கை வைத்துள்ளது.
    Published by:Muthukumar
    First published: