முகப்பு /செய்தி /உலகம் / பாகிஸ்தானில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு!

பாகிஸ்தானில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற ஹோட்டல்

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற ஹோட்டல்

அந்த ஹோட்டலுக்குள் துப்பாக்கிளுடன் நுழைந்த நான்கு தீவிரவாதிகள், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்

  • Last Updated :

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஐந்து நட்சத்திர ஓட்டல் உள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் அந்த ஹோட்டலுக்குள் துப்பாக்கிளுடன் நுழைந்த நான்கு தீவிரவாதிகள், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர் என்று அந்நாட்டின் டான் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

தீவிரவாதிகள், ஹோட்டலுக்குள் நுழைவதைத் தடுக்க முயன்ற செக்யூரிட்டியை சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் டான் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த ஹோட்டலில் இருந்த வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சுப்பாக்கிச் சூடு பாகிஸ்தானில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

top videos
    First published:

    Tags: Pakistan Army