ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்காவில் மேயராக தேர்வான இந்தியர்.. வரலாற்றில் இடம்பிடித்த மைக்கி!

அமெரிக்காவில் மேயராக தேர்வான இந்தியர்.. வரலாற்றில் இடம்பிடித்த மைக்கி!

லோடி நகரின் 117வது மேயராக மைக்கி ஹோத்தி

லோடி நகரின் 117வது மேயராக மைக்கி ஹோத்தி

அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு சீக்கியர்கள் பல்வேறு இடங்களிலும் தாக்கப்பட்ட நிலையில்,ஒரு நகரத்தின் மேயராக சீக்கியர் ஒருவர் இடம்பிடித்தது கவனம் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியர் ஒருவர் அமெரிக்காவின் லோடி நகர மேயராக முதன் முதலாக தேர்வாகி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மைக்கி ஹோத்தி தமது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லோடி நகரத்தின் துணை மேயராக பதவி வகித்த அவர், இதன் பிறகு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்திருந்தார். இந்நிலையில், லோடி நகரின் 117வது மேயராக தேர்வாகியுள்ளார்.

ஆர்ம்ஸ்ட்ராங் சாலையில் உள்ள சீக்கிய குருத்வாராவை அமைத்ததில் பெரும் பங்கு வகித்த மைக்கி ஹோத்தி குடும்பத்தினருக்கு அப்பகுதி மக்களிடையே வரவேற்பு இருந்தது. இந்நிலையில், லோடி நகரத்தின் மேயரானது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹோத்தி, பாதுகாப்பான லோடி நகரத்தின் மேயராக பொறுப்பு வகிப்பதில் பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:படிப்பு வேணும்.. போராடும் பெண்கள்.. அடித்து விரட்டும் தலிபான்கள்.. என்ன நடக்குது ஆப்கானிஸ்தானில்?

மேலும், கல்வி மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தின் பிரதிநிதியாக தம்மை உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு சீக்கியர்கள் பல்வேறு இடங்களிலும் தாக்கப்பட்ட நிலையில், ஒரு நகரத்தின் மேயராக சீக்கியர் ஒருவர் இடம்பிடித்தது கவனம் பெற்றுள்ளது.

First published:

Tags: California, Mayor