இந்தியா, அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தை - பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர்

இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

  • Share this:
    இந்தியா, அமெரிக்கா இடையே ராஜ்ய ரீதியிலான உறவு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ''டூ ப்ளஸ் டூ'' அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி மூன்றாவது அமைச்சர்கள் கூட்டம் இன்று தொடங்கி இருநாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு துறை மார்க் எஸ்பெர் ஆகியோர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர்.

    மேலும் படிக்க...கவனக்குறைவால் வாங்கிய ஆன்லைன் லாட்டரி.. 2 மில்லியன் டாலர் பரிசாக கிடைத்ததில் இன்ப அதிர்ச்சி.



    இந்த குழுவினர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேச உள்ளனர். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளனர். அப்போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தடையில்லா வர்த்தகம், தென்சீன கடலில் சீனாவின் ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Vaijayanthi S
    First published: