மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு 1 லட்ச ரூபாய் போனஸ் அறிவிப்பு

போனஸ் வழங்கியதன் மூலம், மிகவும் கடினமாக உழைத்த ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நன்றி மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது

போனஸ் வழங்கியதன் மூலம், மிகவும் கடினமாக உழைத்த ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நன்றி மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது

 • Share this:
  முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது ஊழியர்களுக்கு 1,500 டாலர் போனஸ் வழங்கவுள்ளது என்று வெர்ஜ் அறிக்கை வெளியிட்டுள்ளது. புதிய வாழ்க்கைமுறை மாற்றத்தை எதிர்கொண்டு, வீட்டிலிருந்தே, வேலையையும் சமாளித்து வந்த ஊழியர்களுக்கும், தொற்றுநோயைக் கையாள்வதில் ஏற்படும் கஷ்டங்களுக்கும் இது பெரிய உதவியாக இருக்கும்.

  மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களை தொற்றுநோய் மற்றும் ஊரடங்கின் போது திருப்தியாக வைத்திருக்கும் முயற்சியாக, இந்த போனஸ் அறிவித்துள்ளது. இந்த கடினமான காலங்களில், ஊழியர்களையும் அவர்களின் பணிகளை பாராட்டும் விதமாகவும், அவர்களை மதிப்புள்ளவர்கள் என உணர வைக்கவும், நிறுவனம் விரும்புகிறது.

  இந்த போனஸ் வழங்குவதால், நிறுவனத்திற்கு சுமார் 200 மில்லியன் டாலர் செலவாகும். மிகவும் கடினமாக உழைத்த ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நன்றி மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று சிஎன்பிசிக்கு அளித்த அறிக்கையில் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். அறிக்கையின்படி, மைக்ரோசாப்ட் முதல் காலாண்டின் இறுதியில் 125 பில்லியன் தொகையில், டாலர் ரொக்கம், மற்றும் பிற முதலீடுகளைக் கொண்டுள்ளது.

  மைக்ரோசாப்டின் மக்கள் தலைமை அதிகாரி (CPO) கேத்லீன் ஹோகன் வியாழக்கிழமை அன்று போனஸ் குறித்து அறிவித்தார். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் உலகளவில் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் மற்றும் மைக்ரோசாப்டின் கிட்ஹப், லிங்க்ட்இன் மற்றும் ஜெனிமேக்ஸ் துணை நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டுமே இந்த போனஸ் பெறுவதற்கு தகுதி பெறவில்லை.

  கார்ப்பரேட் வைஸ் பிரெசிடன்ட் மட்டத்திற்குக் கீழே உள்ள, மார்ச் 31, 2021 அன்று அதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் போனஸ் வழங்கப்படும் தகுதி அளவுகோல்கள் முழுநேர, பகுதிநேர மற்றும் ஹவர்லி கட்டணத்தில் வெளிப்படும் தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் உலகெங்கிலும் சுமார் 175,508 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. வெர்ஜ் அறிக்கையின்படி, 200 மில்லியன் டாலர் என்ற போனஸ் மிகப்பெரியது என்றாலும், இது நிறுவனம் சம்பாதிக்கும் ஒரு நாள் லாபத்தை விட குறைவாகவே உள்ளது.

  உலக அளவில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகள் காரணமாக, மிகவும் தீவீரமான டிஜிட்டல் ஈடுபாட்டின் போக்குகளின் மாற்றத்தின் விளைவாக மைக்ரோசாப்ட் சுமார் 160 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. கிளவுட் சேவைகள், அதிக மடிக்கணினி விற்பனை மற்றும் அதன் எக்ஸ்பாக்ஸ் வணிகத்தின் வளர்ச்சி போன்ற இடங்கள் அனைத்தும் தொற்றுநோயால் நிறுவனத்தின் லாபத்தை உயர்த்தியுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

  இருப்பினும், இந்த சலுகைகளை வழங்கும் ஒரே நிறுவனம் மைக்ரோசாப்ட் மட்டுமே அல்ல. மார்ச் 2020 இல் தொற்றுநோயின் தொடக்கத்தில், ஃபேஸ்புக் ஒவ்வொரு ஊழியருக்கும் ஊரடங்கு காலத்தில் $1000 வழங்கியது. 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில், மற்றொரு முன்னுதாரணமாக அமேசான் நிறுவனம் இருந்தது. கோவிட் -19 நிவாரணத் திட்டத்தை (சிஆர்எஸ்) அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் ஸ்டாஃபிங் முகவர்கள் மூலம் பணியமர்த்தப்பட்ட ஃபிரன்ட்லைன் ஊழியர்கள் குழுக்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. 2020 நவம்பரில், இந்தத் தொழிலாளர்களுக்கு 300 டாலர் விடுமுறை போனஸ் வடிவத்தில் வழங்கப்பட்டது. தேசிய அளவில், உணவு விநியோக நிறுவனமான உபெர் ஈட்ஸ் தனது ஊழியர்களின் உணவுக்கு பணம் செலுத்த உதவியது.
  Published by:Yuvaraj V
  First published: