Home /News /international /

மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெள்ளாவின் மகன் 26 வயதில் உயிரிழப்பு

மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெள்ளாவின் மகன் 26 வயதில் உயிரிழப்பு

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சத்யா நாதெள்ளா, கடந்த 2014-ல் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட்-ன் (MicroSoft)சி.இ.ஓ. சத்யா நாதெள்ளாவின் (Satya Nadella)மகன் ஜைன் நாதெள்ளா (Zain Nadella)தனது 26வயதில் உயிரிழந்தார். இந்த தகவலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சத்யா நாதெள்ளா - அனு தம்பதியின் மகனான ஜைன் நாதெள்ளா, பெரு மூளை வாத நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது. இந்த துயரமான சூழலில் சத்யா நாதெள்ளாவின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும், அவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க - Breaking : உக்ரைன் தலைநகரை விட்டு இன்றைக்குள் இந்தியர்கள் வெளியேற திடீர் உத்தரவு...

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சத்யா நாதெள்ளா, கடந்த 2014-ல் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். மைக்ரோசாஃப்டின் வழக்கமான பணிகளுடன், மாற்றுத் திறன் உடையவர்களும் எளிதாக கல்வி கற்கும் வகையில், புதிய திட்டங்களையும் தொடங்கினார்.

இதையும் படிங்க - கொரோனா வைரஸ் உருவான இடம் இதுதான்... ஆதாரங்களுடன் விஞ்ஞானிகள் புதிய தகவல்

ஜைன் நாதெள்ளாவின் மறைவு குறித்து அவர் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் மருத்துவனையின் சி.இ.ஓ., ஜெஃப் ஸ்பெரிங் கூறுகையில், 'இசை மீது ஜைன் அதிக ஆர்வம் கொண்டவர். ஜைன் எங்கள் எல்லோரிடமும் அன்புடன் பழகினார். அவரது வெகுளித்தனமான புன்னகை, அவரும், அவரது குடும்பத்தினரும் கொண்டு வந்த மகிழ்ச்சி ஆகியவை என்றும் நினைவு கூரப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Microsoft

அடுத்த செய்தி