அமெரிக்கர்களின் மனம் கவர்ந்தோர் பட்டியலில் ஒபாமா தம்பதிக்கு முதலிடம்!

michelle-obama

17 ஆண்டுகளாக அமெரிக்கர்களின் மனம் கவர்ந்த பெண் ஆக இருந்த ஹிலாரி கிளிண்டன் தற்போது பட்டியலில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்கர்களின் மனம் கவர்ந்த ஆண் மற்றும் பெண் பட்டியலில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1946-ம் ஆண்டு முதல் Gallup அமெரிக்கர்களின் மனம் கவர்ந்தோர் குறித்த சர்வே ஒன்றை நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதில் கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்கர்களின் மனம் கவர்ந்த பெண்கள் பட்டியலில் முதலிடத்திலேயே நீடித்து வந்தவர் ஹிலாரி கிளிண்டன்.

முன்னாள் அமெரிக்க அதிபர் வேட்பாளர், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி, முன்னாள் மாகாண செயலாளர் எனப் பல அந்தஸ்துகளைப் பெற்றவர் ஹிலாரி கிளின்டன்.

ஆனால், இந்தாண்டு ஹிலாரியைப் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை மிச்சேல் ஒபாமா கைப்பற்றியுள்ளார். தற்போது தனது ‘Becoming' புத்தகம் தொடர்பான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள மிச்சேல்-க்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.இரண்டாம் இடத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே உள்ளார். மூன்றாம் இடத்தில் ஹிலாரி உள்ளார்.

இதேபோல், அமெரிக்கர்களின் மனம் கவர்ந்த ஆண்கள் பட்டியலில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நீடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளார். மூன்றாம் இடத்தில் ஜார்ஜ் W புஷ் உள்ளார்.

1,025 பேரிடம் நடத்தப்பட்ட சர்வேயில் சர்வதேச அளவில் தங்கள் மனம் கவர்ந்தோர் குறித்த கேள்விகளுக்குக் கிடைத்தப் பதில்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: AUSVIND: பும்ரா அசத்தல்... கோலி சொதப்பல்...
Published by:Rahini M
First published: