’அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்-க்கு மட்டும் அமெரிக்கா சொந்தமானதல்ல. இது நமது அமெரிக்கா’ என மிச்சேல் ஒபாமா, ட்ரம்ப் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதன்முறையாக பதவியேற்ற நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் நால்வரை இனவெறி நிறைந்த சொற்களால் விமர்சித்தார் ட்ரம்ப். இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தற்போது முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மிச்சேல் ஒபாமா கூறுகையில், “முதலில் நாம் அனைவரும் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இது என் அமெரிக்காவோ, உங்கள் அமெரிக்காவோ இல்லை. இந்நாடு நமது அமெரிக்கா. கடந்த பல ஆண்டுகளாக இதனது அழகை நான் பார்த்து வருகிறேன்.
உண்மையில் சொல்லவேண்டுமானல், நம் நாட்டினுள் இருக்கும் வேற்றுமைகள்தான் நம்மை மிகச்சிறந்த நாடாக முன் நிறுத்துகிறது. அகதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அது நமது பெருமை. இன்றைய அதிபரின் கொள்கைகள் நமக்கு கெட்ட கனவுகளாக அமைந்து வருகிறது” என்றார்.
மேலும் பார்க்க: இந்தியாவுக்காக விலையைக் குறைக்கும் நெட்ஃப்ளிக்ஸ்..! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.