முகப்பு /செய்தி /உலகம் / மெக்சிகோவில் விளைநிலத்தில் பூமி உள்வாங்கி பெரிய பள்ளம்: பீதியடைந்த மக்கள்

மெக்சிகோவில் விளைநிலத்தில் பூமி உள்வாங்கி பெரிய பள்ளம்: பீதியடைந்த மக்கள்

சிங்க் ஹோல் என்று அழைக்கப்படும் திடீர்ப் பள்ளம்.

சிங்க் ஹோல் என்று அழைக்கப்படும் திடீர்ப் பள்ளம்.

மெக்சிகோ நாட்டில் மாகாணம் ஒன்றில் வேளாண் விளை நிலம் ஒன்றில் பூமி உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டதையடுத்து மக்கள் பீதியடைந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கியதில் பெரிய பள்ளம் தோன்றியது. இது சாதாரண பள்ளம் அல்ல. சுமார் 300 அடி அகலமும் 60 அடி ஆழமும் கொண்ட பள்ளம் உருவாகியுள்ளது.

இதனையடுத்து ஏதோ பூகம்பம் வெடிக்கப் போகிறது என்று மக்கள் அந்தப் பகுதியை விட்டுத் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர். ஆனால் பள்ளம் விழுவதற்கு முன் பயங்கர சப்தத்துடன் இடி இடித்ததாக அந்த வேளாண் நிலத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஒருவழியாக பயம் விலகிய மக்கள் பிறகு பள்ளத்தை கொஞ்சம் தயக்கத்துடனும் எச்சரிக்கையுடனும் சென்று பார்த்தனர்.

குறிப்பிட்ட இடத்துக்குக் கீழே பூமியில் பாறைகள் குறைவாக இருப்பதும், திடீரென நீர்டோட்டம் ஏற்பட்டாலும் இப்படி பள்ளம் தோன்றும் என்று புவியியல் ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read:  தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பீர் இலவசம்: எந்த நாட்டில் தெரியுமா?

சிங்க்ஹோல் என்று அழைக்கப்படும் இவை பூமியின் மேற்பாறைகளை நீரோட்டம் கரைப்பதால் ஏற்படுவதாகும். சுண்ணாம்புப் பாறைகள் எளிதில் நீரினால் கரைந்து விடும்.

இப்பகுதியில் பூமிக்குக் கீழ் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பதால் இங்கு மழை நீர் அதன் இடைவெளிகள் வழியாக பாறைக்குள் செல்கின்றன. அல்லது பூமிக்கு அடியில் திடீரென நீரோட்டம் ஏற்பட்டால் அது இந்த சுண்ணாம்புப் பாறைகளை எளிதில் கரைத்து விடும். இதனால் மேற்புற பூமி உடைந்து உள்வாங்கும். எங்கு நிறைய மழை பொழிகிறதோ அங்கு இத்தகைய சிங்க்ஹோல்கள் இயற்கையாக உருவாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மெக்சிகோவின் யுகதான் பெனின்சுலாவில் இது போன்ற 2,000 சின்க் ஹோல்கள் உள்ளன. இதனை பண்டைய கால மாயன் கலாச்சாரம் பாதாள உலகிற்கு செல்லும் வழிஎன்று நம்பி வந்ததாக மெக்சிகோ புவியியல் ஆய்வு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

First published:

Tags: Mexico