முகப்பு /செய்தி /உலகம் / மெக்சிகோவில் ஒரே நாளில் இரண்டு பேரிடர்கள்: வெள்ளத்தில் மிதந்த கார்கள்

மெக்சிகோவில் ஒரே நாளில் இரண்டு பேரிடர்கள்: வெள்ளத்தில் மிதந்த கார்கள்

மெக்சிகோ வெள்ளம்

மெக்சிகோ வெள்ளம்

மெக்சிகோவில் ஒரே நாளில் இரண்டு இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்ததால் அந்நாட்டு மக்கள் பீதியில் உறைந்தனர். பிலிப்பைன்சில் புயலை தொடர்ந்து கனமழை பெய்ததால் ஹெர்னானி பகுதியே வெள்ளத்தில் மிதக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடற்கரையோரம் அமைந்துள்ளது டவுண்டவுன் டூலா நகரம். தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த நகரில் பெய்த தொடர் கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. அத்துடன், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் அங்காங்கே தண்ணீரில் மிதந்தன.

தொடர் மழையால் டூலா நகரில் உள்ள பொது மருத்துவமனை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டு நோயாளிகளுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கொரோனா வார்டில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தவர்கள் உட்பட 16 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து.

இதையடுத்து, விரைந்து வந்த மீட்பு படையினர் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளை பத்திரமாக மீட்டு, வேறு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கனமழை பெய்து வரும் நிலையில், தலைநகரம் மெக்சிகோ சிட்டியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெப்லோமாடரோ என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 புள்ளி 9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறி, வீதியில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பிலிப்பைன்ஸ் நாட்டின் ஹெர்னானி பகுதியில் கான்சன் புயல் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. அத்துடன் கடல் கொந்தளித்தது. இதனால், அருகில் உள்ள குடியிருப்புக்குள் கடல் நீர் புகுந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹெர்னானி பகுதியில் மின்சாரம், போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுபாக பாதிக்கப்பட்டது. மேலும், வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது.

First published:

Tags: Mexico