மெக்சிகோவில் பறக்கும் ரயில் மேம்பாலம் உடைந்து மெட்ரோ ரயிலுடன் சாலையில் விழுந்த பயங்கரம்: 15 பேர் பலி

ரயிலுடன் பறக்கும் மெட்ரோ ரயில் பாலம் உடைந்து விழும் காட்சி.

மெக்சிகோ நகரில் மெட்ரோ பறக்கும் ரயில் செல்லும் மேம்பாலம் உடைந்து விழுந்ததில் ரயிலுடன் பாலமும் சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது விழுந்ததில் 15 பேர் இதுவரை பலியானதாகவும் 76 பேர் காயமடைந்திருப்பதாகவும் மெக்சிகோ நகர நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

 • Share this:
  மெக்சிகோ நகரில் மெட்ரோ பறக்கும் ரயில் செல்லும் மேம்பாலம் உடைந்து விழுந்ததில் ரயிலுடன் பாலமும் சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது விழுந்ததில் 15 பேர் இதுவரை பலியானதாகவும் 76 பேர் காயமடைந்திருப்பதாகவும் மெக்சிகோ நகர நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

  பறக்கும் ரயில் பாலம் உடைந்து சாலையில் விழுந்ததன் பயங்கர வீடியோ லோக்கல் சேனல் மிலினீயோ டிவியில் ஒளிபரப்பாகி வைரலாகி வருகிறது.  இடிபாடுகளிலும் விழுந்த ரயிலிலும் மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாலம் இடிந்து விழுந்ததில் சாலையில் கார்கள் பல இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று மீட்புப் பணியாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

  அந்த இடமே போர்க்களமாகக் காட்சியளிக்க இறந்தோர் உடல்களும் படுகாயத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வலியுடனும் காணப்படுகிறது.  இந்த மெட்ரோ ரயில் பறக்கும் பாலம் மெக்சிகோ நகர மேயராக தற்போதிய வெளியுறவு அமைச்சர் மார்சலோ இபார்டு இருந்தபோது கட்டப்பட்டது. ஆனால் அவரோ தன் ட்விட்டரில், “இன்று நடந்த கொடூர விபத்து ஒரு துயரம், இறந்தோர், காயமடைந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

  காரணங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் படையினர் தீயணைப்பு வீரர்கள் எஞ்சியிருப்போரை காப்பாற்றுவதிலும் உடல்கலை எடுப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக மெக்சிகோ சிட்டி மேயர் கூறியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: