எங்கும்... எதிலும்... ஆண்கள் மட்டுமே...! மெக்ஸிகோவில் கடைப்பிடிக்கப்பட்ட பெண்கள் இல்லா தினம்

எங்கும்... எதிலும்... ஆண்கள் மட்டுமே...! மெக்ஸிகோவில் கடைப்பிடிக்கப்பட்ட பெண்கள் இல்லா தினம்
(Image AP)
  • News18
  • Last Updated: March 10, 2020, 7:55 PM IST
  • Share this:
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களுக்கு சம உரிமை வேண்டியும் மெக்ஸிகோவில் பெண்கள் இல்லா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. 

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களுக்கு சம உரிமை வேண்டியும் மெக்ஸிகோவில் பெண்கள் இல்லாத தினம் கடைப்பிடிக்கப்பட்டது. நேற்று ஒரு நாள் முழுவதும் பெண்கள் அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லாமல் புறக்கணித்தனர். இதனால் சாலைகளில் பெரும்பாலும் ஆண்களையே காண முடிந்தது.

ஒரு நாள் முழுவதும் பெண்கள் அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லாமல் புறக்கணித்ததால், நாடே ஸ்தம்பித்தது.


(Image AP)


கடைகள் மூடப்பட்டு அவற்றின் வாயிலில் பர்ப்பிள் வண்ண ரிப்பன்கள் ஒட்டப்பட்டிருந்தன. மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடாரின் (Andres Manuel Lopez Obrador) பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பெண் பத்திரிகையாளர்கள் யாரும் வரவில்லை.

பாலியல் மற்றும் குடும்ப வன்முறையால் மெக்ஸிகோவில் ஆண்டுக்கு 3825 பெண்கள் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: March 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading