மெக்சிகோவில் சாலையில் தரையிறங்கி தீ பற்றிய விமானம்: போதைப்பொருள் கடத்தலா?

மெக்சிகோவில் சாலையில் தரையிறங்கி தீ பற்றிய விமானம்: போதைப்பொருள் கடத்தலா?
(Image - aviation24.be)
  • Share this:
மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் விமானம் நடு சாலையில் தரையிறங்கி தீப்பற்றி எரியும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தென் அமெரிக்காவில் இருந்து மெக்சிகோ வான்வெளிக்குள் நுழைந்த விமானத்தை அந்நாட்டு பாதுகாப்புத்துறையினர் கண்காணித்துள்ளனர்.

திடீரென அந்த விமானம் கிராமப்புற நெடுஞ்சாலையில் தரையிறங்கியதால் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்தனர். அப்போது விமானத்தில் இருந்து புகை வெளியேறியுள்ளது.


இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதற்கிடையே, விமானம் தரையிறங்கிய பகுதியின் அருகே உள்ள யுகாடன் மாகாணத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 390 கிலோ கொகைன் போதைபொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Also read... இதனால், போதைப் பொருள் கடத்தல் கும்பல் அந்த விமானத்தின் மூலம் போதை பொருளை கடத்தி வந்ததா அல்லது இயந்திர கோளாறால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading