முகப்பு /செய்தி /உலகம் / இயற்கை அன்னையின் அருள் பெற முதலையை திருமணம் செய்த மேயர் - இது மெக்சிகோவில் பாரம்பரியம்!

இயற்கை அன்னையின் அருள் பெற முதலையை திருமணம் செய்த மேயர் - இது மெக்சிகோவில் பாரம்பரியம்!

முதலையை மணந்த மெக்ஸிகோ நாட்டு மேயர்

முதலையை மணந்த மெக்ஸிகோ நாட்டு மேயர்

இந்த விழா கொண்டாட்டத்தை எலியா எடித் அகுலியர் என்ற பெண் காட்மதராக(Godmother) இருந்து ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மெக்சிகோ நாட்டில் மேயர் ஒருவர் அந்நாட்டின் பழங்கால பாரம்பரிய வழக்கப்படி முதலையை திருமணம் செய்துள்ளார். மெக்சிகோ நாட்டின் சான் பெட்ரோ ஹுவாமேலூலா என்ற பகுதியின் மேயர் விக்டர் ஹூகோ சவோசா. இவர் கடந்த வியாழக்கிழமை அன்று அந்நாட்டின் பாரம்பரிய பழங்குடி இன முறைப்படி முதலை ஒன்றை திருமணம் செய்துள்ளார்.

இந்த பாரம்பரிய விழாவானது அப்பகுதி மக்களால், இசை வாத்தியம் மேள தாளம் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் நடத்தப்பட்டது. கொண்டாட்ட நிலையில் உள்ளூர் மக்களால் சூழப்பட்டு திருமண நிகழ்விடத்திற்கு மணமகன் அழைத்து வரப்பட்டார். அங்கு முதலை ஒன்றை வெள்ளை நிற உடையில் அலங்காரம் செய்து விழா ஏற்பாட்டாளர்கள் வைத்திருந்தனர்.

ஏழு வயதான முதலையின் வாய்களை கட்டி பாதுகாப்பான முறையில் மேயர் விக்டரின் கையில் தரப்பட்டது. அந்த முதலையை கையில் ஏந்திய மேயர், அதை முத்தமிட்டு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி நடனமிட்டு திருமணம் செய்து கொண்டார்.

மேயர் மணம் முடித்த முதலை ( நன்றி - ராய்டர்ஸ்)

இந்த வினோத விழா கொண்டாட்டம் ஓவாசகா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த பகுதியில் மெக்சிகோ நாட்டின் பாரம்பரிய பூர்வக்குடிகள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த திருமணத்தை இயற்கை அன்னையின் அருளை பெறுவதற்காகக் காலம் காலமாக செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.40 கட்டணத்தில் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கும் கேப்டன் தோனி

தனது பாரம்பரிய திருமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேயர் விக்டர், 'நாங்கள் இயற்கை அன்னையிடம் தேவையான மழை, தேவையான உணவு, நதியில் தேவையான மீன்கள் ஆகியவற்றை வழங்குமாறு கேட்டு வருகிறோம். இயற்கைக்காகவே இந்த பாரம்பரிய விழா கொண்டாட்டம் நடத்தப்படுகிறது' என்றார். இந்த விழா கொண்டாட்டத்தை எலியா எடித் அகுலியர் என்ற பெண் காட்மதராக(Godmother) இருந்து ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார்.

First published:

Tags: Crocodile, Mexico, Rituals