Home /News /international /

ஒளி வீசிக்கொண்டே பூமியை நோக்கி பாய்ந்த விண்கல்... வைரல் வீடியோ! 

ஒளி வீசிக்கொண்டே பூமியை நோக்கி பாய்ந்த விண்கல்... வைரல் வீடியோ! 

meteor caught on camera

meteor caught on camera

சந்திர கிரகணம் என நாம் கண்களால் பார்க்கும் சில நிகழ்வுகளைப் போலவே விண்கற்கள் பூமியில் விழுவதும் அற்புதமான நிகழ்வாகும்.

வானில் தினமும் நூற்றுக்கணக்கான அற்புதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பெரும்பாலானவை நமது கண்ணுக்கு புலப்படாத அதிசயங்கள் ஆகும், சிலவற்றை மட்டுமே நாம் வெறும் கண்கள் அல்லது தொலைநோக்கி வழியாக கண்டு ரசிக்க முடிகிறது. கோள்கள் ஒரே நேர்கோட்டில் காட்சியளிப்பது, சந்திர கிரகணம் என நாம் கண்களால் பார்க்கும் சில நிகழ்வுகளைப் போலவே விண்கற்கள் பூமியில் விழுவதும் அற்புதமான நிகழ்வாகும்.

விண்கற்கள் என்பது விண்வெளியில் இருந்து பூமியில் விழும் பாறைகள் ஆகும், இந்த பாறைகள் பூமியில் காணப்படும் பாறைகளிலிருந்து வேறுபட்டவையாக இருக்கும். பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததுமே பெரும்பாலான விண்கற்கள் எரிந்து சாம்பலாகிவிடும், சில மட்டுமே பூமிக்குள் நுழைய முடியும் என்பதால் விண்கல் விழுவது அதிசயமான நிகழ்வாகும்.

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் விண்கல் ஒன்று வானத்தில் இருந்து ஒளிர்ந்தது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஜனவரி 29ம் தேதி இரவு 7.15 மணி அளவில் வானில் ஒளி வீசிய படியே பூமியை வந்தடைந்த அந்த விண் கல்லின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின.

Also read:  Hyundai நிறுவனத்தின் பாகிஸ்தான் ஆதரவு பதிவுக்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு.. ட்ரெண்டிங்கில் #BoycottHyundai

தற்போது இங்கிலாந்து நாட்டில் இதேபோன்ற அதிசய நிகழ்வு அரங்கேறியுள்ளது. SydneyEggbert என்ற ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஆரஞ்சு மற்றும் சூரியனைப் போல் ஜொலி, ஜொலிக்கும் சிவப்பு நிறத்துடன் விண்கல் ஒன்று வேகமாக பூமியை நோக்கி வரும் காட்சிகள் பதிவாகியுள்ளது. வெறும் 10 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவை பதிவிட்டுள்ள Sydney Eggbert என்ற ட்விட்டர் பக்கம், அதனை பிபிசி தொலைக்காட்சிக்கு டேக் செய்ததை அடுத்து, தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, நார்த் ஈவிங்டனில் உள்ள ஈஸ்ட் பார்க் சாலையில் சென்று கொண்டிருக்கும் டெஸ்லா காரின் முன்பக்க கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 29ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் வேக்ஃபீல்டின் வடக்கு பகுதியில் விண்கல் விழும் காட்சி பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஊடகமான யார்க்ஷயர் லைவ் நார்த் வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்திலும் இதுபோன்ற காட்சிகள் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் விண்கற்கள் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வு சரியாக ஜனவரி 6.58 மணி அளவில் நடத்திருக்க கூடும் என்றும், புதன் கிரக சுற்றுவட்ட பாதையில் இந்நிகழ்வு நிகழ்ந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. 28 கிலோ மீட்டருக்கு கீழே விழுந்த விண்கல் அப்பகுதியில் எங்கும் தென்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெறும் 10 நொடிகளுக்குள் ப்ளே ஆகும் அந்த வீடியோ உண்மையானதா? அல்லது அருகிலுள்ள தெருவிளக்குகளில் இருந்து லென்ஸ் ரிப்லக்‌ஷனால் இவ்வாறு தோன்றுகிறதா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அது எரியும் விண்கல்லாக இருந்திருக்குமா? அல்லது வேறு ஏதாவது? மர்ம பொருளா? என்ற சந்தேகமும் நீடித்து வருகிறது.

 
Published by:Arun
First published:

Tags: Space

அடுத்த செய்தி