முகப்பு /செய்தி /உலகம் / மணிக்கு 88,500 கிமீ வேகத்தில் வந்த விண்கல் அமெரிக்க வானில் வெடித்துச் சிதறியது: மிசிசிபியில் அதிர்ச்சி அலைகள்

மணிக்கு 88,500 கிமீ வேகத்தில் வந்த விண்கல் அமெரிக்க வானில் வெடித்துச் சிதறியது: மிசிசிபியில் அதிர்ச்சி அலைகள்

விண்கல்

விண்கல்

விஞ்ஞானிகளால் போலைட் (bolide) என்று அழைக்கப்படும் இந்த விண்கல், மணிக்கு 88,500 கிலோமீட்டர் வேகத்தில் தென்மேற்கு நோக்கி நகர்ந்தது. இது பூமியின் வளிமண்டலத்தில் ஆழமாக இறங்கும்போது துண்டுகளாக உடைந்து சிதறியது.

  • Last Updated :

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ், லூசியானா மற்றும் மிசிசிபி ஆகிய பகுதிகளில் உள்ள 30 க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை காலை 8 மணியளவில் வானத்தில் இதுவரை கண்டிராத, பிரகாசமான விண்கல்லை பார்த்ததாக தெரிவித்தனர், பின்னர் மிசிசிபியில் உள்ள கிளைபோர்ன் கவுண்ட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உரத்த சப்தம் கேட்டது என நாசா (NASA) தெரிவித்துள்ளது. இது முதலில் மிசிசிபி ஆற்றின் மேலே 54 மைல் (87 கிலோமீட்டர்) தொலைவில், அல்கார்ன், மிசிசிபிக்கு அருகில் காணப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விஞ்ஞானிகளால் போலைட் (bolide) என்று அழைக்கப்படும் இந்த விண்கல், மணிக்கு 88,500 கிலோமீட்டர் வேகத்தில் தென்மேற்கு நோக்கி நகர்ந்தது. இது பூமியின் வளிமண்டலத்தில் ஆழமாக இறங்கும்போது துண்டுகளாக உடைந்து சிதறியது. இது லூசியானாவில் உள்ள மினோர்காவின் இணைக்கப்படாத கான்கார்டியா பாரிஷ் சமூகத்தின் வடக்கே ஒரு சதுப்பு நிலப்பகுதிக்கு மேலே சுமார் 34 மைல் (55 கிலோமீட்டர்) தொலைவில் உடைந்து நொறுங்கியது.

நேரில் பார்த்த ஒரு சாட்சி விக்ஸ்பர்க் போஸ்ட்டிடம், தனக்கு ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும், பின்னர் நிமிர்ந்து பார்த்ததாகவும், "ஒரு கூடைப்பந்து அளவுள்ள ஆரஞ்சு நிற நெருப்புப் பந்து, அதன் பின்னால் ஒரு வெள்ளை வால்" மேற்கு மிசிசிப்பி ஆற்றை நோக்கி செல்வதைக் கண்டதாகவும் கூறினார்.

கிளைபோர்ன் கவுண்டியின் குடிமக்கள், உள்ளூர் அதிகாரிகள், பயங்கர சப்தத்தை கேட்டார்கள், மாவட்டம் முழுவதும் இந்த சப்தம் கேட்டுள்ளது "கிராண்ட் வளைகுடா அணுமின் நிலையம் இந்த நிகழ்வில் பாதிக்கவில்லை. மற்றும் தளம் பாதுகாப்பாக உள்ளது. ... மாவட்டத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த நெருப்புப் பந்து துண்டு துண்டானது, தரையில் பரவும் அதிர்ச்சி அலைகளை உருவாக்க போதுமான ஆற்றலை உருவாக்கியது, அப்பகுதியில் உள்ள மக்கள் உணரும் வகையில் அதிர்வுகளை உருவாக்கியதாகவும் அதன் உச்சத்தில், ஃபயர்பால் முழு நிலவை விட 10 மடங்கு பிரகாசமாக இருந்தது என்றும் நாசா தெரிவித்துள்ளது.

top videos
    First published:

    Tags: NASA, USA