முகப்பு /செய்தி /உலகம் / ஃபேஸ்புக் நிறுவனத்தின் அடுத்த அதிர்ச்சி.. கூடுதலாக பல ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இலக்கு..

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அடுத்த அதிர்ச்சி.. கூடுதலாக பல ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இலக்கு..

காட்சிப்படம்

காட்சிப்படம்

Meta Layoff : மெட்டா நிறுவனம் பல ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaAmericaAmerica

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய முக்கிய சமூக வலைத்தளங்களை இயக்கும் மெட்டா நிறுவனம் கூடுதலாகப் பல ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களாக முதன்மையாக இயங்கிவரும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுவருகின்றனர். எலான் மஸ்கில் டிவிட்டர் நிறுவனம் தொடங்கி இந்தியாவின் பைஜீஸ் நிறுவனம் வரை பலர் அதிரடியாக அவர்களின் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த வரிசையில் ஏற்கனவே இணைந்துள்ள மெட்டா நிறுவனம் சுமார் 11,000 ஊழியர்களைக் கடந்த நவம்பர் மாதம் அதிரடியாக பணிநீக்கம் செய்தது.

தற்போது மீண்டும் பல ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மெட்டா ஊழியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறியுள்ளனர்.

Also Read : பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவு..!

மெட்டா நிறுவனம் தற்போது அவர்களின் மெய்நிகர் கருவியான மெட்டாவேர்ஸ் மேல் கவனம் செலுத்திவருகின்றனர். இதனால் அவர்களுக்குத் தேவையான ஊழியர்கள் மட்டும் வைத்துக்கொண்டு இதர ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிறுவன இயக்குநர்களுக்கு மெட்டா நிறுவன தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

First published:

Tags: Facebook, Instagram, Meta, Metaverse